Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

Ulcer Treatment in Tamil: உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கா..? ரோஜா மோர் குடிங்க... அல்சர் பறந்து போகும்...

Nandhinipriya Ganeshan April 26, 2022 & 15:45 [IST]
Ulcer Treatment in Tamil: உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கா..? ரோஜா மோர் குடிங்க... அல்சர் பறந்து போகும்...Representative Image.

Ulcer Treatment in Tamil: தினமும் மூன்று வேளைக்கும் தவறாமல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். அதிலும் காலை உணவை எக்காரணத்திற்காகவும் தவிர்க்கவே கூடாது என்பது தான் மருத்துவர்களின் அறிவுரை. இந்த பரபரப்பான உலகில் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு காலை உணவை டீ, காபி அல்லது பாலோடு முடித்துவிடுவது தான். இதுமட்டுமில்லை, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல தவறுகள் அல்சரை வரவழைத்துவிடுகிறது.

நீங்க காபிக்கு அடிமையானவரா? அப்ப இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க!.

அல்சர் (Ulcer) என்றால் என்ன?

வயிற்றில் உருவாகும் புண்களைத்தான் குடல் புண், வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறார்கள். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு செரிமானம் ஆக நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது. இது அளவாக சுரக்கும் போது எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. ஆனால், உணவுகளில் உண்டாகும் மாற்றத்தால் இந்த அமிலமானது அதிகமாக சுரக்கும் போது இந்த அமிலமானது குடலின் சுவர்கள் மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் மியுகோஸா பகுதியை சிதைத்து விடுகிறது. இதனால் தான் புண் ஏற்படுகிறது. இந்த புண் தான் குடற்புண் அல்லது அல்சர் எனப்படுகிறது.

பொலிவான சருமத்திற்கு இந்த சம்மர்ல ஜில்லுனு ஒரு ஃபேஸ் பேக்! இத வீட்டிலேயே செய்யலாம்... இது மட்டும் இருந்த போதும்...

அல்சர் வகைகள்:

இந்த மூன்று வகை (Types of ulcers in tamil) அல்சர்களுமே பாதிப்பை உண்டாக்குபவை. அவையாவன,

  • ஈசோபேகல் அல்சர்
  • கேஸ்ட்ரிக் அல்சர்
  • கேஸ்ட்ரிக் அல்சர்

அல்சர் டிரீட்மென்ட்:

பொதுவாக அல்சர் இருப்பவர்களுக்கு எப்போதும் ஒரு மாதிரியான குமட்டல் இருந்துக்கொண்டே இருக்கும். சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் அவதிபடுவார்கள். குறிப்பாக, அல்சர் இருப்பவர்களுக்கு மார்பின் கீழ் வயிற்றுக்கு சற்று மேல் அதாவது விலா எலும்பு முடியும் இடத்தில் எப்போதும் சிறு வலி இருந்துக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றும் வைக்கும் விதமாக, ரோஜா மலரை வைத்து ஒரு மோர் செய்து குடிங்க. அல்சர் பறந்து (Ulcer Treatment in Tamil) போய்விடும்.. எப்படி செய்வது..?

சம்மர் சீசன்ல முடி அதிகமாக கொட்டுதா..? கவலையை விடுங்க... இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க....

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஸ் - 1 (பன்னீர் ரோஸ் இல்லையெனில் சாதாரண நாடு ரோஜாவையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் கலர் அதிகமாக இருக்கும் ரோஜா, பெங்களூரு ரோஜா, அல்லது ஊட்டி ரோஜா போன்றவற்றை தவிர்க்கவும்.

தயிர் - 1 தேக்கரண்டி (அதிகமாக புளித்த தயிரை தவிர்ப்பது நல்லது)

தண்ணீர் - தேவையான அளவு

கல் உப்பு - தேவையான அளவு

சிறு சீரகம் – சிறிதளவு

காலை நேரத்தில் டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுற பழக்கம் இருக்கா? 

செய்முறை:

  • ரோஜாவை நன்றாக கழுவிக் கொண்டு அதை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் தயிரை சேர்த்துக்கொள்ளவும், அதோடு உப்பு, தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
  • உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறு சீரகத்தின் பொடியையும் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இந்த ரோஜா கலந்த மோரை உணவுக்கு பின் ஒரு 5 நிமிடங்களுக்கு பிறகு குடித்து வந்தால், தயிருடன் சேர்த்த ரோஜாவின் இதழில் உள்ள துவர்ப்பு தன்மை குடற்புண்களை எளிதில் குணமாகிவிடும்.
  • இதை ஒரு நாளைக்கு மூன்று வேலையும் உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளவும்.
  • அல்சரினால் அவதிப்படுவோர், வயிற்றில் வலி வரும்போது இதை குடித்தால் அல்சரினால் ஏற்படும் அந்த வலி உடனே காணாமல் போகும்.
  • அதுமட்டுமல்லாமல், இது அல்சரால் வாயில் உண்டாகும் புண்களையும் குணமாக்கும்.

ஆடம்பரத்திலும் எளிமை..வேற லெவலில் வாழும் எலான் மஸ்க்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் மஸ்க்கின் கூலான லைஃப்..!.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்க ளில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்