சருமப் பராமரிப்பில் சீரமும் முக்கிய பங்காற்றுகிறது. மற்ற வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்துவதற்குப் பதில், சருமத்துக்கு சீரம் பயன்படுத்துவது இயற்கையான பொலிவைத் தருகிறது. பொதுவாக சீரத்தை நம் சருமத்திற்கு ஏற்ற படி தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், கெரட்டின் நிறைந்த அல்லது வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்தவற்றை தேர்ந்தெடுப்பது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றதாக அமையும். இந்தப் பதிவில், முகத்திற்கு சீரம் பயன்படுத்துவது குறித்து காண்போம். இதனை தினமும் முகத்திற்கு அப்ளை செய்யலாமா என்பதைப் பற்றியும் காணலாம்.
சரும ஆரோக்கியம்
கோடை மற்றும் குளிர் காலங்களின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, சரும ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியது அவசியமாகும். அதன் படி, ஃபேஷியல் சீரத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, க்ரீன் டீ, வைட்டமின் ஈ, எக்ஸ்ட்ராக்ட், கெரட்டீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இந்த ஊட்டச்சத்துக்களானது, சருமத்துக்குத் தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதுடன் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு
மன அழுத்தம் அதிகரிக்கும் போது, முடி உதிர்தல், சரும பிரச்சனைகள் ஏற்படும். மேலும், ஊட்டச்சத்து குறைவான உணவுப் பழக்க வழக்கங்களாலும் பெரும்பாலும் சருமப் பிரச்சனைகள் உண்டாகிறது.
இதில், ஏற்படும் சேதத்தை சரி செய்வதற்கு, முறையான பராமரிப்பு அவசியம் ஆகும். இது சருமத்திற்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஃபேசியல் சீரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு உதவக் கூடியதாக அமைகிறது.
ஈரப்பதத்தை அளிக்கும் சீரம்
பல்வேறு அழகு சாதனப் பொருள்களான டோனிங், மாய்ஸ்சரைசிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய பிறகும், சருமமானது பொலிவு இல்லாமல் காணப்படும். இது இயற்கையாகவே, நம் முகத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் உண்டாகும்.
இவற்றை மாற்ற, சீரம் பயன்படுத்துவது ஒரு சிறப்பான தீர்வாக அமைகிறது. இது சருமத்திற்கு பளபளப்பைத் தருவதுடன் அழகாக வைத்திருக்க உதவுகிறது. ஃபேஸ் சீரமானது முகத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
கரும்புள்ளிகள் நீங்க
இந்த ஃபேஸ் சீரம் பயன்படுத்துவதன் மூலம், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள், கோடுகள் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது.
இந்த சீரமானது, சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நீக்குவதுடன், அழுக்கை வெளியேற்றுகிறது.
தினந்தோறும் சீரம் பயன்படுத்தினால்
சீரமை முகத்திற்கு தினந்தோறும் பயன்படுத்துவதன் மூலம், இயற்கையான அழகைப் பெற முடியும். அதாவது இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் மூலப்பொருள்கள், இயற்கையாக ஸ்கின் அமைப்பை மேம்படுத்தி உதவுகிறது.
சரும வறட்சியை நீக்க
இந்த ஃபேஸ் சீரமானது ஈரப்பதத்தை வழங்க கூடியதாக அமைகிறது. இது பல்வேறு சிறந்த பலன்களை அளிக்கக் கூடியதாக அமைகிறது. இதன் ஈரப்பதத்தினால், சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்க உதவுகிறது. அதே போல, முகத்தில் அதிக வறட்சியின் காரணமாக ஏற்படக் கூடிய அரிப்பு, சிவந்து போகுதல், எரிச்சல், சருமத்தடிப்புகள் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…