Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா.? | Sex During Periods Is Safe Or Not

Gowthami Subramani Updated:
மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா.? | Sex During Periods Is Safe Or NotRepresentative Image.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடலுறவு மேற்கொள்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இந்த கேள்விக்கான விடை குறித்து இந்த பதிவில் காணலாம்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு

மாதவிடாய் இருப்பதால், பாலியல் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்பது அர்த்தமல்ல. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது உடலுறவு கொள்வது, மாதத்தின் மற்ற நேரங்களை விட மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களுக்கு சில மனமாற்றங்கள் ஏற்படும். இந்த மாறுபாட்டை, மூட் ஸ்விங் (Mood Swing) எனலாம். பொதுவாக பாலியல் செயல்பாடு மாதவிடாய் காலத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி மற்றும் முழுத் தலைவலியைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பான உடலுறவு

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அடிப்படையில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது மிக முக்கியம் ஆகும். ஏனெனில், இந்த நேரங்களில் உடலுறவை மேற்கொள்வது எச்.ஐ.வி போன்ற பாலியல் பரவும் நோய்த் தொற்றைப் பெறும் அபாயம் ஏற்படலாம். வைரஸ் மற்றும் பிற நோய்க்கிருமிகள் போன்றவை மாதவிடாய் இரத்தத்தில் இருக்கும். இந்த ஆபத்தைக் குறைப்பதற்காக, பாதுகாப்பான உடலுறவிற்காக ஆணுறை பயன்படுத்துவதை மருத்துவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

pH அளவு

மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் அமெரிக்க காங்கிரஸ் (ACOG)-ன் படி, பிறப்புறுப்பானது மாதம் முழுவதும் 3.8 முதல் 4.5 வரையிலான pH அளவைப் பராமரிக்கிறது. ஆனால், மாதவிடாய் நேரத்தின் போது, இரத்தத்தின் pH அளவானது அதிகமாக இருப்பதால், இந்த அளவு உயர்கிறது. இந்த சமயத்தில் ஈஸ்ட் வேகமாக வளரும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஈஸ்ட் தொற்றுக்கான அறிகுறி, மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்னதாகவே ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சமயத்தில் உடலுறவு அறிகுறிகளை அதிகப்படுத்தலாம். அதே சமயம், இந்நேரத்தில்  உடலுறவு கொண்டால், ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கு அதிக ஆபத்து ஏற்படுவதற்கு சான்று இல்லை எனவும் கூறப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் கர்ப்பம்

மாதவிடாய் சமயத்தில் உடலுறவில் ஈடுபடும் போது கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுழற்சி குறைவாக இருக்கும் நேரம் அதாவது 21 முதல் 24 நாள்கள் இருக்கும் போது மற்றும் மாதவிடாயின் முடிவில் உடலுறவு கொண்டால், ஆண்களின் விந்தணுக்கள் யோனியில் 4 நாள்கள் வரை சாத்தியமாக இருக்கும். இதன் காரணமாக, கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

வலி நிவாரணியாக

மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்பு, உடல் வலி, மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது நன்மை தரும். இந்த சமயத்தில் என்டோர்பின்கள் – ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் போன்ற உணர்ச்சி தரக்கூடிய ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். இருப்பினும், இதற்கு எந்த குறிப்பிட்ட ஆராய்ச்சியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்