Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Cold Water Disadvantages in Tamil: வெயில் தாங்க முடியாம ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க...!

Nandhinipriya Ganeshan April 27, 2022 & 10:45 [IST]
Cold Water Disadvantages in Tamil: வெயில் தாங்க முடியாம ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க...!Representative Image.

Cold Water Disadvantages in Tamil: இந்த கோடைக்காலம் வந்துவிட்டாலே, கொலுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ஜில்லுனு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். குறிப்பாக வீட்டுல பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் சம்மர் சீசனில் எப்போதும் ஐஸ் வாட்டரே தான் கதி என இருப்பார்கள். குளிர்ந்த தண்ணீரை குடிக்கும் பொழுது வியர்வையால் நனைந்து இருக்கும் உடலும் நல்ல குளிர்ச்சி அடைந்தது போல் இருக்கும். ஆனால் குளிர்ந்த நீரை அடிக்கடி அருந்துவது பல உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் நீரின் வெப்பநிலை மாறும்போது அதன் தன்மையும் மாறுபடுவது இயல்புதானே. அப்படி, மாறும்போது உடலில் எம்மாதிரியான பிரச்சனைகள் (ice water disadvantages in tamil) வரும் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஐஸ் வாட்டரை அடிக்கடி குடிப்பதால் பற்கள் தான் அதிகமாக பாதிப்படைகிறது. அந்த வகையில், குளிர்ந்த நீரை குடிக்கும் போது பற்களில் கூச்சம், வலி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நம் உடலின் வெப்ப நிலையை விட குறைவான வெப்பநிலை அதாவது ஜில்லுனு இருக்கும் பொருளை அருந்தும் போது உடலின் வெப்ப நிலையை சீராக்க உடல் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். இதனால், உடலுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்து, ஆற்றலாக மாறி வீணாகிவிடும்.

சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிப்பது செரிமானத்தை அதிகரிக்கும், ஆனால் ஐஸ் வாட்டரை குடிப்பது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடித்தால் உணவு உள்ள செல்ல நேரம் எடுக்கும். அதேசமயம் இந்த உறை வெப்பநிலை குடல் இயக்கங்களையும் பாதிக்கிறது. பிறகு, இதன் விளைவு மலச்சிக்கல் தான்.

சுத்தமில்லாத அதாவது உப்பு தண்ணீரை குளிர்வித்து குடிப்பவர்களுக்கு உடனடியாக தொண்டை தொற்று நோய்கள் உருவாகும்.

உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்க வேண்டுமெனில் உடலின் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்கும்போது திடீரென உங்கள் உடல் வெப்பநிலை மாறுவதால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் ஆணுறுப்பு விறைப்படைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே உறவில் ஈடுபடுவதற்கு முன் குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

குளிர்ந்த நீர் உங்கள் இதய துடிப்பை குறைக்கவல்லது. இதற்கு காரணம் உங்கள் கழுத்திற்கு பின்புறமுள்ள வாகஸ் என்னும் நரம்பு திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதுதான். மீண்டும் சாதாரண வெப்பநிலையை அடையும் வரை உங்கள் இதய துடிப்பு குறைவாகத்தான் இருக்கும்

அதிகமாக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானம் குடித்தால் உங்களுடைய நரம்புகளை உறைய செய்து, அவை உங்கள் மூளைக்கு உடனடி தகவல் அனுப்பும் இதன் விளைவு தலைவலி தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்