மாறிவரும் லைஃப்ஸ்டைலில் வயது வித்தியாசமின்றி இன்று அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான் அல்சர் (வயிற்றுப்புண்). நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, டீ, காபி குடிப்பது, மது அருந்துவது, புகைப்பிடித்தல் உட்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. அதேபோல், ஆஸ்பிரின் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவு செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கப்படும். இந்த அமிலம் குறிப்பாக காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் தான் அதிகமாக சுரக்கும். இந்த நேரத்தில் நாம் சாப்பிடாமல் இருப்பதால், செரிமானத்திற்கு உணவு இல்லாமல், இரைப்பையின் சுவரை பாதிக்க ஆரம்பிக்கும். இதுவே நாளடைவில், புண்ணாக மாறுகிறது. மேலும், இந்த புண்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
வயிற்றி வலி..
அல்சரின் முதல் அறிகுறி வயிற்றில் ஏற்படும் கடுமையான வலி தான். இது மேல் மற்றும் நடு வயிற்றிலும் வரலாம். அதுவே சாப்பிட்ட உடனே வலி வந்தால் இரைப்பையில் புண்கள் இருக்கின்றது என்று அர்த்தம். இதை 'கேஸ்டிக் அல்சர்' என்பார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு 2 லிருந்து 3 மணி நேரம் கழித்து வயிறு வலி குறைந்தால், முன் சிறுகுடலில் அல்சர் இருக்கிறது என்று அர்த்தம்.
நெஞ்செரிச்சல்..
இடது நெஞ்சின் அடிப்பகுதியில் குத்துதல் போன்ற உணர்வு. நெஞ்சு எரிச்சல், மார்பு பகுதி பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை இரப்பை மற்றும் உணவு குழாயில் அல்சர் இருப்பதை குறிக்கிறது. அதேபோல், வழக்கத்தைவிட அதிகமான உமிழ்நீர் சுரப்பதும் பெப்டிக் அல்சருக்கான அறிகுறியே. அதுவும் இரவு தூங்கும் போதும் அதிகமான உமிழ்நீர் சுரக்கும்.
எதுக்கலிப்பு..
இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே இசோபோக்கள் ஸ்டாலிண்டரர் வால்வு அமிலங்களால் அரித்து, பலவீனம் அடையும்போது வயிற்றில் உள்ளே இருக்கும் அமிலமானது உணவுக்குழாயில் மேல்நோக்கி வரும். இதை தான் எதுக்கலிப்பு என்பார்கள். அதுமட்டுமல்லாமல், அதிகமாக ஏப்பம் வருவது, சாப்பிட்ட உணவு தொண்டையை நோக்கி வருவது போன்ற உணர்வு ஆகியவையும் அல்சருக்கான அறிகுறிகள் தான்.
குமட்டல் & வாந்தி..
காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாந்தி ஏற்படுவது அல்லது சிறிது இரத்தத்துடன் கூடிய வாந்தி ஏற்படுவது போன்றவை அல்சருக்கான அறிகுறியே. பொதுவாக, வயிற்றில் உள்ள அமிலத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது குமட்டலுடன் கூடிய வாந்தி ஏற்படும். எனவே, அவ்வப்போது சிறிது சிறிது உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, காலியாக வைத்திருக்காதீர்கள். அதேபோல், இப்யூபுரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளில் இருந்து ஒதுங்கி இருப்பதும் நல்லது.
பசியின்மை..
அல்சர் இருப்பவர்களுக்கு உணவு செரிமானமாவதர்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், வயிற்றில் வாயுக்கள் அதிகரித்து வயிறு உப்பசம், வயிறு மந்தநிலையில் போன்ற பிரச்சனைகளின் விளைவாக பசி எடுக்காது. இருந்தாலும், சிலருக்கு வயிறு பசிக்கும்போது எரிச்சல் மற்றும் கசக்கும் உணர்வை ஏற்படுத்தும். அந்தசமயத்தில் சாப்பிடும்போது வலி வெகுவாக குறைக்கப்படுகிறது.
எடை இழப்பு..
உணவுக்குழாய், வாய்க்குழி ஆகியவற்றில் அல்சர் இருந்தால் உனவை விழுங்கும்போது அதிக வலி ஏற்படும். அதோடு, அல்சர் இருப்பதால் உணவு செரிமானம் சரியாக நடக்காது. அதனால், சரியாக உணவு சாப்பிட முடியாது. உணவு சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு தேவையான சத்து கிடைக்காமல் உடல் எடை குறையும்.
மலம் கருப்பாக வெளியேறுவது..
மலம் கருப்பாக வருவது அல்லது இரத்தம் கலந்து வருவது போன்றவை உங்களுக்கு அல்சர் முற்றிவிட்டத்தை உணர்த்தும் அறிகுறிகளாகும். அதாவது, வயிற்றில் உள்ள புண்களில் இருந்து இரத்தம் கசிந்து உணவுடன் கலந்து வெளியேறும் போது மலம் கருப்பாக வரும். ஒருசிலருக்கு மலத்தில் இரத்த கசிவும் இருக்கும். இது பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…