Summer Beauty Tips Tamil: சீசனுக்கு சீசன் ஒவ்வொரு பழம் ஃபேமஸாக இருக்கும். அந்த வகையில் சம்மர் சீசனில் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி (கோசாப்பழம்), வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதும், அதை ஃபேஸ் பேக் போல் பயன்படுத்துவதும் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். அப்படிப்பட்ட சம்மர் சீசன் பழங்களில் எல்லாருக்கும் பிடித்த பழம் என்றால் அது தர்பூசணி பழம் தான். அதன் இனிப்பு சுவையும், சிவப்பு நிறமும் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு இருக்கும். இவற்றில் பல வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கின்றன. கோடைக் காலங்களில் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
இந்த பழத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தை பெற உதவும். இந்த கோடைக்காலத்தில் முகம் வியர்வையால் ரொம்ப பொலிவை இழந்து எண்ணெய் பசையாக காணப்படும். வாடிய சருமத்தை மீண்டும் பிரகாசமாக்க, வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யக்கூடிய தர்பூசணி ஃபேஸ் பேக்குகளை (summer beauty tips in tamil) எப்படி தயார் செய்வது என்று கீழே கொடுத்துள்ளோம்.
தயிர் மற்றும் தர்பூசணி:
தயிர் மற்றும் தர்பூசணி இரண்டுமே சம்மர் சீசனில் குளிர்ச்சி தரக்கூடியவை. எனவே, இது இரண்டையும் கலந்து உங்கள் முகத்தில் பேக்காக அப்ளை பண்ணும் போது பொலிவான சருமத்தை பெறுவீர்கள்.
பால் மற்றும் தர்பூசணி:
பாலிற்கு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் இந்த இரண்டையும் வைத்து ஒரு ஃபேஸ் பேக் செய்தால் எப்படி இருக்கும். வாங்க ரெடி பண்ணலாம்.
தர்பூசணி மற்றும் தேன்:
தேன் சருமத்தில் உள்ள முகப்பரு, வடுக்கள், மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. தர்பூசணி பழத்திலும் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டத்துக்கள் நிறைந்துள்ளன. இது முகத்தில் உருவாகும் முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் சருமப் பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்:
இந்த இரண்டுமே சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், அரிப்பு, நீரிழப்பு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும், வெள்ளிக்காய் சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் நிறமாறுபாடுகளையும் அகற்ற உதவி செய்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…