Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Summer Hair Care Tips in Tamil: சம்மர் சீசன்ல முடி அதிகமாக கொட்டுதா..? கவலையை விடுங்க... இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...

Nandhinipriya Ganeshan April 23, 2022 & 13:00 [IST]
Summer Hair Care Tips in Tamil: சம்மர் சீசன்ல முடி அதிகமாக கொட்டுதா..? கவலையை விடுங்க... இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...Representative Image.

Summer Hair Care Tips in Tamil: ஒவ்வொரு பருவ காலமும் நம் தலைமுடிக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல், இன்றைய சுற்றுசூழலில் சும்மாவே நமக்கு முடிக் கொட்டும். அதிலும் இந்த சம்மர் சீசன் சொல்ல வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தால் உங்கள் முடி ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறது. எனவே, ஒவ்வொரு முடி வகைகளுக்கும் தனி கவனிப்பு தேவைபடுகிறது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு எண்ணெய் பசை தலைமுடியாக இருந்தால், நீங்க உலர்ந்த முடிக்கான ஷாம்பூவைப் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, உங்களுடைய முடியின் வகைக்கு ஏற்ப நீங்க ஒரு எண்ணெயை தேர்ந்தெடுப்பதும் அவசியம்.

பொலிவான சருமத்திற்கு இந்த சம்மர்ல ஜில்லுனு ஒரு ஃபேஸ் பேக்! இத வீட்டிலேயே செய்யலாம்... இது மட்டும் இருந்த போதும்...

பொதுவாக, கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏனெனில், எண்ணெய் உடல் சூட்டை தனிக்கும் மற்றும் வறட்சியில் இருந்தும் பாதுகாக்கும். அதோடு கூடவே, எண்ணெய் முடியை பளபளப்பாகவும் வலுவாகாவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அனைத்து வகையான கூந்தலுக்கும் பொருந்தும். சில சமயங்களில், உச்சந்தலையில் வைக்கும் எண்ணெய் தலை முடியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது. அந்த வகையில், கோடைக் காலத்தில் (Summer hair care tips for men) ஆண்களுக்கான சிறந்த முடி எண்ணெய் (Hair Oil) எது என்பதை பார்க்கலாம்.

மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டி கட்டியா வெளிவருகிறதா...? பயப்பட வேண்டாம்.. இத ட்ரை பண்ணுங்க...

அவகேடோ ஆயில் (Avocado Oil)

அவகேடோ எண்ணெயில் இரும்பு, வைட்டமின்கள் பி,டி,ஏ,ஈ, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. குறிப்பாக, இந்த எண்ணெய் செதில்களாக, உலர்ந்த, சேதமடைந்த முடிக்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. இதனால், கோடைக் காலத்தில் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். மேலும், அவகேடோ ஆயில் புற ஊதா கதிர்கள் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வலுவற்ற முடியை பலப்படுத்தவும் பயன்படுகிறது.

இஃப்தருக்கு ஈசியான ரெசிபிஸ்... இப்படி ட்ரை பண்ணுங்க...

ஆலிவ் ஆயில் (Olive Oil)

வறண்ட மற்றும் மொரட்டு தனமான முடிக்கு ஆலிவ் ஆயில் பெஸ்ட் சாய்ஸ். இது முடியை வலுவலுப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. நீங்க தனியாக கண்டிஷனர் வாங்கி பயன்படுத்த அவசியமே இருக்காது. இந்த கோடைக்காலத்தில் உங்க கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க ஏற்ற ஆயில் இது தான். மேலும், ஆலிவ் ஆயில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

வந்தாச்சு மாம்பழ சீசன்.. குளுகுளு டேஸ்டியான மாம்பழ குச்சி ஐஸ்/மாம்பழ பாப்ஸிகல்..!

ஜோஜோபா ஆயில் (Jojoba Oil)

ஜோஜோபா எண்ணெயில் நம் உச்சந்தலையில் உள்ள செபம் எனப்படும் இயற்கை எண்ணெயின் அதே மூலக்கூறு காணப்படுகிறது. இது மற்ற எண்ணெய்களை போல் இருக்காது. ஏனெனில், இந்த எண்ணெய் மணமற்றது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. வறண்ட முடிக்கு ஏற்ற ஆயில். இது முடி வளர்ச்சிக்கும் ரொம்ப உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல், தலையில் ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் முடி உதிர்தலையும் தடுக்கிறது.

சம்மருக்கு கூலான தர்பூசணி மில்க் ஷேக்..!.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)

எல்லா விதமான முடி வகைகளுக்கும் ஏற்ற ஒரே எண்ணெய் எது என்று சொன்னால், அது தேங்காய் எண்ணெய் மட்டுமே. முடி பராமரிப்புக்கான பட்டியலில் எப்போது முதல் இடத்தில் இருப்பது தேங்காய் எண்ணெய் தான். மிகவும் பிரபலமான ஹார் ஆயில். மற்ற எண்ணெய் வகைகளை ஒப்பிடுகையில், மிகவும் மலிவான விலை, அதிக பயன்களை கொண்டிருக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிப்பது, பொடுகை விரட்டுவது, ஊட்டச்சத்தை அளிப்பது, வறண்ட உச்சந்தலையை எதிர்த்துப் போராடுவது, முடிக்கு பளபளப்பைக் கொடுப்பது என இதன் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கோடைக்காலத்தில் பயன்படுத்தும் எண்ணெய்களில் இந்த எண்ணெயும் ஒன்று.

காலையில் எழுந்தவுடன் மனதை மயங்கும் டீ, காபி செய்யனுமா…. வாங்க இந்த ரெசிபியே போதும்!.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்