Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for Girlfriend

Nandhinipriya Ganeshan Updated:
டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image.

காதலர் வாரத்தில் நான்காவது நாளான டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் ஜோடிக்கு ஒரு டெடி பியர் பொம்மையை பரிசாக வழங்குவார்கள். இது காதலன் காதலியின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த அழகான டெடி மன கவலைகளை மாற்றி, பெண்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். ஒரு வேளை உங்க காதலி பொம்மைகள் மீது ஒவ்வாமை உள்ளவராக இருந்தால் அல்லது அதை பிடிக்காதவராக இருந்தால் என்ன செய்வீங்க. கவலை வேண்டாம், அப்படிப்பட்டவர்களுக்கு இந்த டெடி தொடர்பான ஃபேஷன் பொருட்களை வாங்கி பரிசாக கொடுக்கலாம். அதை தினமும் பயன்படுத்தும்போது உங்களோட நினைவு அவர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

பாண்டா ஹூடி [Panda Hoodie]

பாண்டாவை விட அழகான டெடி இருக்கவே முடியாது. ஆனால் அதற்காக பாண்டாவை வாங்கி கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக பாண்டா டிசைன் ஹூடியை வாங்கி கொடுக்கலாம். இந்த ஹூடி குளிர்க்காலங்களில் சூடான அரவணைப்பை தரும்.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

டெடி பிரிண்டட் டி-ஷர்ட் [Teddy Printed T-shirt]

பஞ்சு அடைத்த டெடிக்குப் பதிலாக, அழகான டெடி பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை உங்க லவ்வருக்கு வாங்கிக் கொடுங்க. அதை அவர்கள் உடுத்தும் போதெல்லாம் நீங்க தான் நினைவுக்கு வருவீங்க.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

டெடி பியர் நைட் சூட் [Teddy Bear Night Suit]

உங்க காதலி நைட் சூட் போடுவதை விரும்பினால், உடனே யோசிக்காமல் டெடி பியர் பிரிண்ட் செய்யப்பட்ட நைட் சூட்டை வாங்கி கொடுங்க. அதுவும் அவர்களுக்கு பிடித்து வாங்கினால் ஆனந்தத்தின் உச்சம்.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

டெடி ஹோம் ஸ்லிப்பர்ஸ் [Teddy Home Slippers]

ஒரு சிலருக்கு வீட்டில் செருப்பு போட்டு நடப்பதுதான் பிடிக்கும். ஒரு வேளை உங்க காதலியும் அப்படினா அவங்களுக்கு ஒரு அழகான டெடி ஹோம் ஸ்லிப்பர்ஸை வாங்கி கொடுக்கலாம்.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

டெடி பியர் டாலர் [Teddy Bear Pendant]

உங்களால் முடிஞ்சா உங்க லவ்வருக்கு டெடி பியர் போட்ட மாதிரியான டாலரை வாங்கி தரலாம். அது கவரிங்கோ, தங்கமோ அல்லது பிளாட்டினமோ உங்க வசதிக்கேற்ப. இது நீங்க அவர்களின் பக்கத்திலேயே இருக்கும் உணர்வை தரும்.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

டெடி பியர் தோடு [Teddy Bear Studs]

பொதுவாகவே பெண்களுக்கு தோடு போடுவது ரொம்ப பிடிக்கும். அதிலும் அதை மனதிற்கு பிடித்த ஒருவரால் பரிசளிக்கப்பட்டால், அவர்களின் சந்தோசத்திற்கு எதுவும் ஈடில்லை. இந்த டெடி டேயில் உங்க காதலிக்கு டெடி பியர் மாடலில் தோடுகளை வாங்கி கொடுத்து அசத்துங்க.

டெடி டேயில் உங்க லவ்வருக்கு இந்த மாதிரி கூட கிஃப்ட் பண்ணலாம்.. அதுவும் கம்மி பட்ஜெட்ல.. | Teddy Day Gifts Idea for GirlfriendRepresentative Image

இந்த டெடி டேயில் இம்மாதிரியான பொருட்களை பரிசாக வாங்கி உங்க காதலியை ஆச்சர்யப்படுத்துங்க. இப்படி செய்தால் அவர்களுக்கு உங்களின் மீதான காதல் இரட்டிப்பாகவும் வாய்ப்புள்ளது. பழைய முறையையே பின்பற்றாமல் இப்படி புதுசா ட்ரை பண்ணுங்க ஆண்களே....

Happy Teddy Day..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்