Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். முதல் மூன்று மாதங்கள் முடிந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு அடியெடுத்து வைக்கும் கர்ப்பிணிகளுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் கட்டமாகும். இந்த கட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் மனதில் இருந்து விலகி ஒரு புத்துணர்வு கிடைக்கும். முதல் மூன்று மாதங்களில் எப்படி ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தீர்களோ அதேபோல் இந்த கட்டத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக தொடங்கும். இதனால், சில சிரமங்கள் எழலாம். இருப்பினும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவற்றை தவிர்க்கலாம். அந்தவகையில், நான்கு மாத கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பத்தின் 4 வது மாதத்தில் செய்ய வேண்டியவை:
❖ மருத்துவரின் ஒப்புதலுக்கு பின் வழக்கமான பயிற்சிகளை செய்ய தொடங்கலாம். பாதுகாப்பான மற்றும் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்க வழக்கமான நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதேனும் உடற்பயிற்களும் செய்யலாம். ஆனால், மருத்துவரின் அறிவுறுத்தலின் படியே செய்ய வேண்டும்.
❖ படுக்கும் போது எப்போதும் இடது பக்கத்தில் படுப்பதே சிறந்தது. மேலும், கால்களுக்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கென்றே பிரத்யேக தலையணை வைத்து உறங்க முயற்சியுங்கள். இது வளரும் கருவுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
❖ 4 வது மாதத்தில் மூக்கில் இரத்தம் கசிவது, மூக்கில் அடைப்பு மற்றும் காதுகள் அடைப்பு போன்றவை பொதுவானவை தான். எனவே, எல்ல நேரங்களிலும் உங்களுக்கு தேவையான மருந்துகளை உடன் வைத்திருப்பது நல்லது.
❖ இந்த கட்டத்தில் வயிறு பெரிதாக தொடங்கும். எனவே, கர்ப்பிணிகள் பயன்படுத்தும் ஆடைகளை அணியுங்கள். அதேநேரத்தில், வழக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அது இறுக்கமாகவும் சங்கடமாகவும் இருக்கலாம்.
❖ உங்கள் துணையுடன் நெருக்கத்தை பேணுவது மிகவும் முக்கியமானது என்பதால் உடலுறவில் ஈடுபடுங்கள். இருப்பினும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.
❖ ஈறுகளில் இரத்தம் கசிவதால் வாய்வழி சிக்கல்களைத் தவிர்க்க வழக்கமான பல் பரிசோதனைக்கு செல்லுங்கள். அதை எக்காரணத்திற்காகவும் தள்ளிப்போட வேண்டாம்.
Tags:
early pregnancy care tips, health tips for pregnant women, pregnancy care tips in tamil, 4 month pregnancy care tips in tamil, second trimester pregnancy tips, second trimester tips in tamil, things to do in second trimester, things to do in 4th month of pregnancy for normal delivery, for normal delivery what to do in 4th month
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…