Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Thiruvathirai Special: திருவாதிரை களி செய்வது எப்படி? | Thiruvathirai Kali Recipe

Gowthami Subramani Updated:
Thiruvathirai Special: திருவாதிரை களி செய்வது எப்படி? | Thiruvathirai Kali RecipeRepresentative Image.

பெருமாளுக்குரிய மார்கழி மாதத்திற்கு ஏராளமான தனிச்சிறப்புகள் உண்டு. செய்த பாவங்கள் விலகி, புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி நன்னாளும் இந்த மாதத்தில் பிறக்கும். அதே போல, மார்கழியில் வரும் திருவாதிரை நன்னாளில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவர். திருவாதிரை நோன்பு கடைபிடிக்கும் நபர்கள், இதனை நிறைவு செய்யும் விதமாக திருவாதிரை களி செய்து இறைவனுக்குப் படைக்கப்பட்டு வழிபடுவர். இந்த திருவாதிரை களி செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு) இருப்பது எப்படி? தாலி கயிறு மாற்றும் முறை

Thiruvathirai Special: திருவாதிரை களி செய்வது எப்படி? | Thiruvathirai Kali RecipeRepresentative Image

தேவையான பொருள்கள்

வெல்லம் – 400 கிராம்

முந்திரி – தேவையான அளவு

திராட்சை – தேவையான அளவு

நெய் – ¼ கப்

பச்சரிசி – 2 கப்

ஏலக்காய் பொடி – ½ மேசைக்கரண்டி

துருவிய தேங்காய் – ½ கப்

Thiruvathirai Special: திருவாதிரை களி செய்வது எப்படி? | Thiruvathirai Kali RecipeRepresentative Image

திருவாதிரை களி செய்யும் முறை

✤ முதலில் வாணலி ஒன்றை எடுத்து, அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

✤ அதன் பின், பாத்திரம் ஒன்றில் மூன்றரை கப் அளவிலான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்.

✤ பிறகு, பாத்திரத்தில் இருக்கக் கூடிய தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, அதில் கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும்.

✤ இதில், மாவை தண்ணீரில் போட்ட பின், அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

✤ தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை நன்கு கிளற வேண்டும்.

✤ இந்த வெல்லம் கரைந்து பாகு ஆகும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

✤ மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

✤ பின் வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.

✤ இவ்வாறு வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

இவ்வாறு நீங்கள் எதிர்பார்த்த திருவாதிரை களி ரெடியானது. திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்