Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!

Gowthami Subramani Updated:
எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image.

ஒருவரது வாழ்நாளில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களைப் பொறுத்தே, அவர்களது உடல்நிலை அமையும். இன்றைய நவீன உலகில், வாய்க்கு ருசியாக பல்வேறு உணவுப் பொருள்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை நம் உடலுக்கு பாதிப்பையே ஏற்படுத்துமாறு அமைகின்றன. அந்த வகையில், நாம் மிக இளமை வயதிலேயே வயதாவது போல தோற்றத்தையும் அளிக்கின்றன.  இவ்வாறு, நம் சருமத்தை என்றும் பளபளப்பாக வைத்திருக்க, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும்.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

வயதாவதைத் தாமதப்படுத்த அல்லது தடுக்க

ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் என்றால், அதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருக்க வேண்டும். அதன் படி, பயோட்டின், வைட்டமின் சி & ஈ உள்ளிட்டவை இயற்கையாகவே கொலாஜன் பூஸ்டர்களாக செயல்படுவதுடன், நமது சருமத்திற்கு நன்மைகளைத் தருகிறது. இதில் சில உணவுப் பொருள்கள், பழ வகைகள் சருமத்தின் வயதாவதைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகின்றன. அதன் படி, நம் வாழ்நாளில் இளமையாக தோற்றம் பெற நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருள்களைப் பற்றி காண்போம்.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

கேரட்

நம் அன்றாட உணவில் கேரட் எடுத்துக் கொள்வது சிறந்த பயனை அளிக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆரஞ்சு பிக்மென்ட்ஸ் ஆனது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதுடன், நோய்களை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. மேலும், கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆனது உடலுக்குள் வைட்டமின்-ஏ ஆக மாற்றப்பட்டு சரும திசுக்களை சரி செய்ய உதவுகிறது. மேலும், சூரியக் கதிர்களுக்கு எதிராக சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் என்ற சக்தி வாய்ந்த ரேடிக்கல்கள் உள்ளது. இது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. அதாவது சருமம் வயதாகுவதிலிருந்து தடுக்கப்பட்டு, கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், கேன்சரை எதிர்த்துப் போராடவும், கொழுப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

கீரைகள்

பொதுவாக, அனைத்து வகையான கீரைகளிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் கே நிறைந்துள்ள கீரைகள் இதய நோய் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. இதில் உள்ள நீர்ச்சத்தானது சுருக்கம், கண்புரை வராமல் தடுக்க உதவுகிறது.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

தக்காளி

தக்காளிப் பழத்தில் உள்ள லைகோபீன், வைட்டமின் சி போன்றவை உடல் நலத்தில் பெரிதும் பங்காற்றுகிறது. லைகோபீன் ஆனது, உணவுக்குழாய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிறு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. தக்காளியில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், முதுமையின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைப்பதற்கு உதவுகிறது.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

வெங்காயம்

அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியவற்றுள் வெங்காயமும் ஒன்று. இதில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஆனது சருமத்தில் கொலாஜனை உருவாக்கி, சுருக்கம், கோடுகள், சரும தளர்வு உள்ளிட்டவற்றிலிருந்து நம்மைக் காக்க உதவுகின்றன.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

திராட்சைப் பழம்

இயற்கையாகவே, முதுமையைத் தடுக்கும் பண்புகளைக் கொண்ட பழம் திராட்சைப் பழம் ஆகும். இதில் ரெஸ்வெராட்ரோல் எனப்படும் வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. இது, வயதாவதற்கான அறிகுறிகள், பிற தோல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. திராட்சைப் பழத்தில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள் சரும செல்களின் சிதைவைத் தடுக்கிறது.

எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!Representative Image

முட்டைக்கோஸ்

இது சக்திவாய்ந்த ஆன்டி-ஏஜிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, டி போன்றவை சரும செல்கள் சிதைவடைவதைத் தடுத்து, சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. முட்டைக்கோஸை பச்சையாகவோ, லேசாக சமைத்தோ, வறுத்தோ சாப்பிடுவது நன்மையை அளிக்கும். இதில் உள்ள கார்பினோல் சத்துகல் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்தைச் சரி செய்ய உதவுகிறது. முட்டைக்கோஸ் உண்பதன் மூலம், இளமையில் வயதான தோற்றம் உருவாவதைத் தடுக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்