Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அழகான மற்றும் மென்மையான பாதங்களை பெற சில பயனுள்ள குறிப்புகள்..

Nandhinipriya Ganeshan September 27, 2022 & 17:00 [IST]
அழகான மற்றும் மென்மையான பாதங்களை பெற சில பயனுள்ள குறிப்புகள்..Representative Image.

Tips to Remove Dead Skin: உடலில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்,  பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், ஈரப்பதம் மிகக் குறைவாக இருப்பதால், அவை வெடிப்பு மற்றும் இறந்த சருமத்திற்கு ஆளாகின்றன. இதேபோல், பாதங்கள் தொடர்ந்து மூடிய காலணிகளை அணிந்து நடைபயிற்சி உராய்வினால் இறந்த சரும செல்கள் ஏற்படுகின்றன. அவை உலர்ந்து, பாதத்தின் அடிப்பகுதியில் விரிசல் ஏற்படுத்துகிறது. பொதுவாக, கால்களை மென்மையாக்க உதவும் உங்கள் கால்களை மென்மையாக்க உதவும் ஊறவைத்தல், ஸ்க்ரப்கள் மற்றும் இரவு நேர சிகிச்சைகள் போன்ற பல முறைகள் உள்ளன. 

காலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவது மிகவும் எளிது, அதற்கு நீங்க ரொம்ப கஷ்பட வேண்டிய அவசியம் கிடையாது. சாதாரணமாக ஸ்க்ரப் செய்தாலே இறந்த செல்கள் வெளியேறி, சருமத்தில் புதிய மற்றும் ஆரோக்கியமான செல்களை வளர உதவுகிறது. எனவே, சருமத்தின் வகையைப் பொருட்படுத்தாமல், இறந்த சரும செல்களை தவறாமல் அகற்றுவது அவசியம். உங்கள் காலில் உள்ள இறந்த சருமத்தைப் போக்க மிகவும் பயனுள்ள சில வீட்டு வைத்தியங்கள் (remove dead skin from legs) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை முயற்சித்து பாருங்கள்.....

உங்கள் காலில் இருந்து இறந்த சருமத்தை அகற்ற சிறந்த வழிகள்:

பியூமிஸ் ஸ்டோன்

பியூமிஸ் ஸ்டோன் என்பது சிறந்த கால் பராமரிப்பு கருவிகளில் ஒன்றாகும். இது சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் காலில் உள்ள இறந்த சருமம் மற்றும் கால்சஸ்களை அகற்ற உதவி செய்கிறது. ஆனால், காயம்பட்ட பகுதிகளில் இதைப் பயன்படுத்தக் கூடாது என்பதை மட்டும் எப்போது நினைவில் கொள்க.

  • ஒரு அரை டப் வெதுவெதுப்பான நீரை எடுத்து உங்கள் கால்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • பின்னர் பியூமிஸ் ஸ்டோனால் பாதங்களை மெதுவாக தேய்த்து நீரில் கழுவி விடுங்கள். பாதங்களில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். மென்மையான தோல் பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 
  • நன்றாக கால்களை உலர்த்தி, மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை பூசிக்கொள்ளுங்கள். 
  • பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை வெளியேற்ற வாரத்திற்கு இரண்டு முறை இந்த செயல்முறையை செய்யவும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் இயற்கையான அமிலத்தன்மை உள்ளதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எளிதில் அகற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. கால்களுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. 

  • ஒரு டப் நிறைய வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு எலுமிச்சை பழத்திய பிழிந்து விடவும். 
  • பின்னர், உங்கள் கால்களை 10-15 நிமிடங்கள் ஊறவைத்து, பியூமிஸ் கல் அல்லது ஏதேனும் கால் தூரிகை மூலம் அவற்றை ஸ்க்ரப் செய்யுங்கள்.
  • கால்களை கழுவி, உலர்த்திவிட்டு மாய்ஸ்சரைசர் போட்டுக் கொள்ளுங்கள்.
  • தேவைப்படும் போது இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.

பாரஃபின் வாக்ஸ்

பாரஃபின் மெழுகு அல்லது பாரஃபின் வாக்ஸ் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர்; இதை சருமத்தின் மேற்பரப்பில் பூசும்போது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. உலர்ந்த மற்றும் வெடிப்பு பாதங்களுக்கு சிறந்த தீர்வு. மேலும், இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகப்படுத்துகிறது. 

  • பாரஃபின் மெழுகை உருக்கி, அதை உங்கள் கால்கள் பூதும் அளவில் உள்ள பாத்திரத்தில் மாற்றவும்.
  • பின்னர் சூடான பாரஃபின் மெழுகில் உங்கள் கால்களை நனைக்கவும், மெழுகின் இயற்கையான மென்மையாக்கும் சருமத் துளைகளைத் திறந்து, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. 
  • மெழுகு கெட்டியாகும்போது, ​​அதை வெளியே இழுக்கவும், அப்போது இறந்த சரும செல்களும் அதனுடன் சேர்ந்து வந்துவிடும். 

ஒருவேளை, உங்கள் கால்களில் சொறி அல்லது புண், குறைவான இரத்த ஓட்டம் போன்றவை இருந்தால் பாரஃபின் வாக்ஸை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

எப்சம் சால்ட்

எப்சம் உப்பு, மெக்னீசியம் சல்பேட் அல்லது குளியல் உப்பு என அழைக்கப்படுகிறது. இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது. இந்த உப்பு வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட மற்றும் வெடிப்புள்ள பாதங்களை சரிசெய்ய உதவுகிறது.

  • ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் அதில் 1/2 கப் எப்சம் உப்பை சேர்க்கவும்.
  • உங்கள் கால்களை 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இறந்த சருமத்தை அகற்ற கால் பிரஷ் அல்லது பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தவும்.
  • பின்னர், கால்களை உலர வைத்து, பின்னர் லோஷனைப் பயன்படுத்தவும்.
  • சிறந்த பலன்களைப் பெற வாரம் ஒருமுறை இதைச் செய்யுங்கள்.

வினிகர்

வினிகரில் அமில தன்மை உள்ளது, இது உங்கள் பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவி செய்கிறது. வறண்ட சருமம் மற்றும் மருக்கள் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இறந்த சரும செல்களை உரிக்க சைடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம்.

  • ஒரு பாத்திரத்தில், வினிகர் மற்றும் குளிர்ந்த நீரை 1: 2 விகிதத்தில் சேர்க்கவும். 
  • அதில் உங்கள் கால்களை 15 நிமிடம் ஊறவைத்து, பியூமிஸ் ஸ்டோன் மூலம் மெதுவாக தேய்க்கவும்.
  • சாதாரண நீரில் கழுவி, தேங்காய் எண்ணெயை தடவவும்.
  • இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா உங்கள் உடலில் இருந்து இறந்த சரும செல்களை அகற்ற உதவும் ஒரு சிறந்த தோல் எக்ஸ்ஃபோலியேட்டர். இருப்பினும், பேக்கிங் சோடா அரிப்பு மற்றும் சிவப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ஏதேனும் பிரச்சனை இருந்தால், சமையல் சோடாவைப் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. 

  • 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கால்களை நன்றாக சுத்தம் செய்து, இந்த கலவையை தடவவும்.
  • ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவவும்.
  • வறட்சியைத் தவிர்க்க கால்களில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
  • வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள்

தேனும் சர்க்கரையும்

தேன் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. அதேமாதிரி, வெள்ளை மற்றும் பழுப்பு சர்க்கரை  (white and brown sugar) இரண்டும் ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகும், இது உங்கள் கால்களில் இருந்து இறந்த சருமத்தை அகற்றி, அவற்றை பிரகாசமாக்க உதவுகிறது.

  • ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு தேக்கரண்டி வெள்ளை அல்லது பழுப்பு சர்க்கரையை கலக்கவும்.
  • 5-10 நிமிடங்களுக்கு இந்த ஸ்க்ரப்பரைக் கொண்டு உங்கள் கால்களை தேய்க்கவும்.
  • பின்னர், கழுவி மாய்ஸ்சரைசர் பயன்படுத்து கொள்ளுங்கள். 
  • இந்த எளிய மெத்தேடை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

உங்கள் கால்களை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்:

  • உங்கள் கால்களை தவறாமல் எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.
  • உங்கள் கால்களை மிருதுவாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க நிறைய தண்ணீர் பருகுங்கள்.
  • சூடான குளியல் அல்லது குளிப்பதைத் தவிர்க்கவும்.
  • அடிக்கடி பாத பீல் (foot peel) பயன்படுத்துங்கள்.
  • ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மூலம் உங்கள் கால்களை ஈரப்பதமாக்குங்கள்.
  • 3-4 வாரங்களுக்கு ஒருமுறை பெடிக்குர் செய்யுங்கள். 
  • ஆல்கஹால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்