Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கிஸ் டே ஸ்பெஷல்.. முத்தங்களும் அர்த்தங்களும்.. | Types of Kisses & Their Meaning in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கிஸ் டே ஸ்பெஷல்.. முத்தங்களும் அர்த்தங்களும்.. | Types of Kisses & Their Meaning in TamilRepresentative Image.

முத்தத்தில் நூறுவகையான முத்தங்கள் உள்ளன, ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு வகையான உணர்வை உணர்த்தக்கூடியது. நூறு சொற்களை காட்டலும் ஒரு முத்தம் உங்களின் ஒட்டுமொத்த அன்பையும், உணர்வையும் உங்க லவ்வரிடம் உங்களைப் பற்றி சொல்லிவிடும். சரி வாங்க, உங்க லவ்வர் உங்களுக்கு எந்த வகையான முத்தம் கொடுக்கிறார் அல்லது நீங்க உங்க லவ்வருக்கு எந்த வகையான முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள் அவற்றின் அர்த்தத்தை தெரிந்துக்கொள்வோம். 

கிஸ் டே ஸ்பெஷல்.. முத்தங்களும் அர்த்தங்களும்.. | Types of Kisses & Their Meaning in TamilRepresentative Image

முத்தத்தின் வகைகள்:

நெற்றியில் முத்தம் 

நெற்றியில் முத்தமிடுவது அம்மாவின் முத்தம் என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் உங்களின் மீது வைத்துள்ள பாசத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தக் கூடியது. எனவே, நெற்றியில் உங்கள் காதலன்/காதலிக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களை நீங்கள் ஸ்பெஷலாக உணரச்செய்யலாம்.

மூக்கில் முத்தம் 

உங்க துணை உங்களின் மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம். உங்களுக்குள் இருக்கும் கடந்த கால கசப்புகளை மறக்க, மன்னிப்பு கோரா இது ரொமாண்டிக் வழியும் கூட.

உதட்டில் முத்தம் 

உங்க லவ்வர் உங்களை உதட்டில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை உயிருக்கும் மேலாக நேசிக்கிறார் என்று அர்த்தமாம். காதலர்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலமான கிஸ் இதுதான். 

கைகளில் முத்தம் 

உங்க துணை உங்க கைகளை பிடித்து முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தம். இதுவும் கண்ணியமான முத்தமாக கருதப்படுகிறது. இது ரொம்பவே ஓல்ட் ஸ்டெல்லுன்னு நீங்க சொல்லாலாம் ஆனா ஓல்ட் இஸ் கோல்ட்டுங்க.

கன்னத்தில் முத்தம் 

கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்க துணை நட்பாக இருக்கவும் பாசத்தை வெளிப்படுத்துவதையும் குறிக்கும். இந்த வகை முத்தத்தை நண்பர்கள், காதலர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.

கிஸ் டே ஸ்பெஷல்.. முத்தங்களும் அர்த்தங்களும்.. | Types of Kisses & Their Meaning in TamilRepresentative Image

கழுத்தில் முத்தம் 

கழுத்து பகுதி ரொம்பவே சென்ஸ்டிவ்வான இடம். உறவில் நெருக்கத்தை விரும்பும் காதலர் தன் லவ்வரின் கழுத்தில் முத்தமிட்டு தன் விருப்பத்தை வெளிப்படுத்தலாம். தீவிரமான உறவுக்கு ஒரு முன்னோட்டமாகவும் இந்த வகை முத்தம் அமைகிறது.

கண்களை திறந்து கொடுப்பது

உங்க துணை உங்களுக்கு முத்தம் கொடுக்கும்போது கண்களை திறந்து கொண்டு கொடுத்தால், அவர் உங்களை மேலும் சந்தோஷப்பட வைப்பதுடன், உங்க உணர்ச்சியை ரசிக்க விரும்புகிறார் என்று அர்த்தமாம். இந்த வகை கிஸ் புதிய தம்பதிகளிடம் ஃபேமஷான ஒன்று.

கண்களை மூடி கொடுப்பது 

காதலர்கள் இருவரும் முத்தம் கொடுக்கும்போது கண்களை மூடிக்கொண்டு, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தால், அந்த அழகான தருணத்தை ரசிக்க ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தமாம். 

கண்களில் முத்தம் 

உங்க லவ்வர் உங்களின் கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு அவர் எப்போதும் உங்களுடன் இருக்க விரும்புகிறார் என்று அர்த்தமாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்