Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

முகம் வெள்ளையாக சார்க்கோல் பவுடரை பயன்படுத்துங்கள்!!!

Hemalatha Krishnamoorthy January 24, 2022 & 16:25 [IST]
முகம் வெள்ளையாக சார்க்கோல் பவுடரை பயன்படுத்துங்கள்!!!Representative Image.

எல்லோருக்கும் சருமம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காகவே பல அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் போது, சருமம் வெள்ளையாக பல நாட்கள் எடுத்துக் கொள்ளும். எளிய முறையில் மற்றும் விரைவாக சருமம் வெள்ளையாக இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

கரும் புள்ளிகள், கரும் திட்டுகள், ஆயில் ஃபேஸ், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை இந்த சார்க்கோல் பவுடரை (Charcoal powder) பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.

சார்க்கோல் பவுடர் தயார் செய்வது எப்படி ?

சார்க்கோல் பவுடரை (Charcoal powder) தயார் செய்யத் ‌தேவையான பொருட்கள் 

  1. தேங்காய் மூடி 

செய்முறை 

முதலில் தேங்காய் மூடியை நன்கு எரித்து கொள்ளவும். பிறகு எரித்த தேங்காய் மூடியை ஆற வைத்து உடைத்து பொடி ஆக்கிக் கொள்ளவும். அந்த பொடியை டப்பாவில் அடைத்துக் கூட பயன்படுத்தலாம்.

சார்க்கோல் மாஸ்க் (Charcoal Mask) தயார் செய்வது எப்படி ?

தயாரித்த பொடியுடன் சில பொருட்களைச் சேர்த்து இந்த சார்க்கோல் மாஸ்க்கை (Charcoal Mask) முகத்தில் அப்ளை செய்தால் கரும் புள்ளிகளை அகற்றி முகத்தை வெண்மையாக்கும்.

சார்க்கோல் மாஸ்க்கை தயார் செய்ய ‌தேவையான பொருட்கள் 

  1. சார்க்கோல் பவுடர்  (Charcoal powder)  1 டீஸ்பூன்
  2. ஜெலட்டின் பவுடர் (Gelatin powder)  1 டீஸ்பூன்
  3. தேன்  1 டீஸ்பூன்
  4. பால்   50 மில்லி
  5. தேங்காய் எண்ணெய் 3 தூளி (3 drop)

செய்முறை

  • ஒரு சிறிய டம்ளரில் 1  டீஸ்பூன் சார்க்கோல் பவுடர் (Charcoal Powder), 1  டீஸ்பூன் ஜெலட்டின் பவுடர் (Gelatin Powder), 50 மில்லி பாலினை சேர்த்து பேஸ்ட்டைப் போல கலந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும், கலவை உள்ள டம்ளரைப் பாத்திரத்தில் வைத்து ஜெலட்டின் பவுடர் கரையும் வரை கலக்கி விடவும்.
  • பிறகு சுத்தமான ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும். ஆறிய கலவையில் 1  டீஸ்பூன் தேன், 3 தூளி தேங்காய் எண்ணெய்யைத் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  • இந்த கலவையை முகத்தில் உள்ள புருவம், தலை முடிகளில் படாமல் தடவவும்.
  • 10 நிமிடங்கள் பிறகு, முகத்தில் உள்ள மாஸ்க்கை அகற்றிக் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்றி வெண்மையான முகத்தை பெறலாம்.

ஆக்டிவேடட் சார்கோல் மாஸ்க் (Activated Charcoal Mask)

கடைகளில் எளிதாகக் கிடைக்கும் ஆக்டிவேடட் சார்கோலை பயன்படுத்தி வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கலாம் அதற்கு தேவையான பொருட்கள் 

  1. ஆக்டிவேடட் சார்கோல் 1 டீஸ்பூன்
  2. முட்டை 1 
  3. தேன் 2 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல், முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பிறகு 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலவையுடன் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் மாஸ்க்கை அகற்றி, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி கொள்ளவும்.
  • இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் முகம் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

குறிப்பு 

முகத்திலிருந்து மாஸ்க்கை அகற்று போது மெதுவாக அகற்றவும்.

இந்த கலவையை பயன்படுத்தும் போது அரிப்பே அல்லது எரிச்சலே ஏற்பட்டால், உடனே முகத்தை கழுவி விடுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்