Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாடாய்படுத்தும் வாயுப் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம்.. 

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 20:30 [IST]
பாடாய்படுத்தும் வாயுப் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம்.. Representative Image.

வாயு என்பது இயல்பான ஒன்று. பொதுவாக நாம் சாப்பிடும் உணவு தான் நமது உடலில் வாயுவை உருவாக்குகிறது. நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் காற்றை விழுங்குகிறோம். இதனால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை உடைக்கின்றன. இதன் விளைவு வாயு தான். எனவே, உணவு மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடும்போது முடிந்த அளவிற்கு மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நன்றாக மென்றும் சாப்பிடுங்கள். அப்படி ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி வாயு பிரச்சனை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள். 

வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:

➤ வாயு தொல்லைக்கு வாழைப்பழமும் மிகச் சிறந்த வீட்டு வைத்தியம். எனவே, வாயு பிரச்சனை வரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் உடனே கட்டுப்படுத்திவிடும். 

➤ புதினா இலைகள் அமில உற்பத்தியை தடுக்கிறது. எனவே, வாயு பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் புதினா இலைகலை மென்று சாறை விழுங்குவதன் நல்ல தீர்வு கிடைக்கும். 

➤ வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் சீரகம், சோம்பு, ஏலக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

➤ தேங்காய் துருவல் சாப்பிடுவது அல்லது தேங்காய் தண்ணீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாயு தொல்லையில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம். இவை உடலில் ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது.

➤ தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், வாயு தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். இது ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது. 

➤ வாயு தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டு சாப்பிட, வாயு தொல்லை உடனே சரியாகிவிடும். ஏனென்றால், பப்பாளி பழம் வயிற்றில் ஜீரண அமிலங்களை முறையாக தூண்ட உதவி செய்கிறது. இதனால், வாயு தொல்லையே வராது. (கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் முறையை தவிர்க்கவும்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்