Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Weekend Special Recipes: இந்த வீக் எண்டை ஸ்பெஷலாக்க வெரைட்டியான ஆம்லெட் ரெசிபிஸ்... 

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 16:15 [IST]
Weekend Special Recipes: இந்த வீக் எண்டை ஸ்பெஷலாக்க வெரைட்டியான ஆம்லெட் ரெசிபிஸ்... Representative Image.

மஷ்ரூம் குழி ஆம்லெட் செய்வது எப்படி?

தேவையானவை:

2-3 காளான் 

1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்

2 முட்டை

1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி

ஒரு பல் பூண்டு

சிறிதளவு கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது)

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

மேலே கூறிய பொருட்களை வைத்து ஆறு ஆம்லெட் வரை செய்யலாம்.

Also Read: பிரெட் குக்கீஸ் இப்படி செஞ்சி பாருங்க..

செய்முறை:

முதலில், காளானை கழுவி துணியால் துடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை, சிறிதளவு உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக அடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 11/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு பல்லு பூண்டை தட்டி போட்டு அத்துடன் நறுக்கிய காளான், சிறிதளவு உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். காளான் வெந்து பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடவும்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழிக்குள்ளேயும் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முட்டை கலவையை 3/4 குழி நிரம்பும் வரை ஊற்றி அதன் நடுவில் காளான் துண்டை வைக்கவும். அதேப்போல், எல்லா குழிக்குள்ளேயும் வைத்துக் கொள்ளுங்கள்.

தீயை மிதமான சூட்டில் வைத்து இருபுறமும நன்றாக வேக வைத்து எடுத்தால் மஷ்ரூம் குழி ஆம்லெட் ரெடி..!!

பீட்ரூட் ஆம்லெட் செய்வது எப்படி?

தேவையானவை:

சிறிதளவு கறிவேப்பிலை

2 முட்டை

3 டீஸ்பூன் எண்ணெய்

உப்பு தேவையான அளவு

சிறிய பீட்ரூட் ஒன்று

1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்

1 பெரிய வெங்காயம் 

1/4 டீஸ்பூன் சீரகம்

சிறிதளவு கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது)

மேலே கூறிய பொருட்களை வைத்து இரண்டு ஆம்லெட் வரை செய்யலாம்.

Also Read: ஹயக்ரீவர் பிரசாதம் எப்படி செய்வது?

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொண்டு, எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். 

இப்போது, அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு சுடவைத்து, நாம் கலக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி சுற்றி பரப்பிவிடுங்கள். வெந்ததும் திருப்பிப்போட்டு எடுத்து சூடாக பரிமாறவும். 

Tags:

Egg omelette recipe, Variety of egg omelette, Egg omelette recipe easy, How to make mushroom omelette recipe, How to make beetroot omelette 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்