Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்களுக்கு முட்டை பிடிக்காதா? அப்ப முட்டையில்லாமலே ஆம்லெட் செய்யலாமே.. எப்படி?

Nandhinipriya Ganeshan November 21, 2022 & 15:58 [IST]
உங்களுக்கு முட்டை பிடிக்காதா? அப்ப முட்டையில்லாமலே ஆம்லெட் செய்யலாமே.. எப்படி?Representative Image.

பொதுவாக அசைவ பிரியர்கள் முட்டையில் செய்யக் கூடிய அனைத்து ரெசிபிகளும் மிகவும் பிடிக்கும். இதனால், அவர்களுக்கு புரோட்டீன் சத்து எளிதில் கிடைத்துவிடும். ஆனால், சைவப் பிரியர்கள் புரோட்டீன் சத்து கிடைப்பதற்கு, உணவுகளை தேடித்தேடி சமைத்து சாப்பிட வேண்டும். இனி அந்த கவலையே வேண்டாம். புரோட்டீன் சத்து நிறைந்த இந்த சைவ ஆம்லெட் உங்களுக்குத் தேவையான புரோட்டீனை கொடுக்கிறது. இந்த ரெசிபியை செய்வதும் மிகவும் எளிது. இதை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். சரி, வாங்க முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

கோதுமை, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, மக்காச்சோளம், உளுந்து, முந்திரி - 50 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள்.

பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்

செய்முறை:

முதலில் வாணலில் பருப்பு வகைகளை தனித்தனியாக எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள் தனித்தனியாக தான் வறுக்க வேண்டும்.

அதேபோல், முந்திரி, உளுந்து, மக்காச்சோளம் ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் ஆறவைத்து, அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டி கொரகொரப்பாக பவுடர் செய்துக்கொள்ளுங்கள். 

இப்போது, இந்த பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், அந்த கலவையில் வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தோசை போல் சுட்டு எடுத்தால், சத்தான ஆம்லெட் ரெடி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்