வெஜ் சொதி. இந்தப் பெயரை ஒரு சில பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதன் சுவை நாவில் எச்சில் ஊற வைக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி என மாறி மாறி ஒரே உணவைப் பரிமாறாமல், இந்த சுவை மிக்க வெஜ் சொதி செய்து ஆப்பத்திற்குத் தொட்டு சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையானது மட்டுமல்ல. ஆரோக்கியமானதாகவும் கூட. அது மட்டுமல்லாமல், இந்த வெஜ் சொதியை சுலபமாக 15-யே நிமிடத்தில் செய்து விடலாம். சரி, இதில் வெஜ் சொதி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதில் கேரள ஸ்டைலில் வெஜ் சொதி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம்.
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கப்பட்டது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கப்பட்டது)
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
பச்சை பட்டாணி – 1 கப்
தேங்காய் பால் – 2 கப் (நீர் போன்றது)
தேங்காய் பால் – 1 கப் (கெட்டியானது)
சர்க்கரை – 1 டீஸ்பூன் அளவு
பட்டை – 1 சிறிய துண்டு
ஏலக்காய் – 2
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
✤ முதலில் வாணலி ஒன்றை எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். பின், அதில் பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
✤ அதன் பின்னர், வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
✤ பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
✤ பின்னர், இதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், பச்சை பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து பச்சை மிளகாயைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
✤ அதன் பிறகு, சுவைக்கேற்ப சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி, நீர் போன்ற தேங்காய்ப் பாலை ஊற்றி கிளறி விட வேண்டும். இதனை மிதமான தீயில் வைத்து காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
✤ பிறகு, காய்கறிகள் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். கடைசியாக, எடுத்து வைத்திருக்கும் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான வெஜ் சோதி தயாராகி விடும். இதனை ஆப்பத்திற்கு சைடு டிஷ் ஆக சேர்த்துப் பரிமாறலாம்.
இந்த சுவை மிக்க வெஜ் சோதி ரெசிபியை இந்த புத்தாண்டு பண்டிகைக்கு செய்து சுவைத்து மகிழலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…