Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Vinayagar Chaturthi 2023 Kolukattai in Tamil - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 'வாழைப்பழ கொழுக்கட்டை' செய்வது எப்படி..?

Nandhinipriya Ganeshan September 07, 2023 & 17:30 [IST]
Vinayagar Chaturthi 2023 Kolukattai in Tamil - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 'வாழைப்பழ கொழுக்கட்டை' செய்வது எப்படி..?Representative Image.

Vinayagar Chaturthi 2023 Kolukattai in Tamil: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான். அந்த பத்து நாட்களுக்கு எந்த கோவிலில் பார்த்தாலும் கொழுக்கட்டை மணம் தான் வீசும். அதுமட்டுமல்லாமல், வீட்டிலும் விநாயகருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டையை செய்து நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள். இதை மோதகம் என்று அழைப்பதுண்டு. ஆனால், கொழுக்கட்டையை பலவிதமாக செய்யலாம். அந்த வகையில், தற்போது ஒரு வித்தியாசமான கொழுக்கட்டையை தான் எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம்.

இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷாலிட்டியே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தை கொண்டு செய்வதுதான். உண்மையில், இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையை ருசிக்க வாய்ப்பாக அமையலாம். எனவே, இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்க விரும்பினால், இந்த வாழைப்பழ கொழுக்கட்டையை செய்து படையுங்கள். 

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 'மோத்திசூர் லட்டு'

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த வாழைப்பழம் - 2

இடியாப்ப மாவு - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

நெய் - தேவைக்கேற்ப

அரிசி மாவு - 1/2 கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 3/4 கப்

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 'தேன் கொழுக்கட்டை'

செய்முறை:

❖ முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

❖ பின்பு, அதில் நாம் எடுத்து வைத்துள்ள இரண்டு வாழைப்பழத்தை தோளுறித்து மசித்து சேர்த்துக் கொள்ளவும். அதோடு, ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

❖ இப்போது, அதில் அரிசி மாவை சேர்த்து நன்றாக கிளறவும். மாவு நன்கு ஒன்று சேர்ந்ததும் இறக்கி, ஆற விடவும்.

❖ பிறகு, ஆறிய மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்து கொள்ளவும். 

❖ இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து சூடானதும் இட்லி தட்டை வைத்து மூடி, ஒரு 10 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கினால், சூப்பரான சுவையில் வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி.

❖ இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த விநாயகர் சதுர்த்திக்கு செய்து அசத்துங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்