Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,357.21
413.53sensex(0.57%)
நிஃப்டி22,288.10
140.20sensex(0.63%)
USD
81.57
Exclusive

உடலுறவுக்கு பின் என்ன செய்யணும்? செய்யக்கூடாது? | Things to do after Sex in Tamil

Priyanka Hochumin Updated:
உடலுறவுக்கு பின் என்ன செய்யணும்? செய்யக்கூடாது? | Things to do after Sex in TamilRepresentative Image.

படுக்கையறையில் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் உடலுறவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் அதுவே அதற்கு அடிமையாகி விட்டால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். எனவே, ஆரோக்கியமான செக்ஸ் மிகவும் அவசியம். அதையும் விட மிகவும் முக்கியமானது செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதைத் தெரிந்துக் கொள்வதாகும். ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் மேம்படுத்த உதவும்.

உடலுறவுக்கு பின் என்ன செய்யணும்? செய்யக்கூடாது? | Things to do after Sex in TamilRepresentative Image

என்ன செய்யணும்?

ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொண்ட பின்னர் உங்களின் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். உள் பகுதியை அல்ல அதனை சுற்றியுள்ள பகுதியை. அதுக்காக செக்ஸ் வைத்துக் கொண்ட உடன் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு துண்டை வெதுவெதுப்பான நீரில் முக்கி அதனைப் பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ளலாம். இப்படி செய்வதனால் UTIs போன்ற தொற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முறியும்.

உடலுறவின் போது, உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயான சிறுநீர்க்குழாயில் பாக்டீரியாக்கள் நுழையலாம். இதனால் தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் சிறுநீர் கழித்தால் அந்த பாக்டீரியாக்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

அதுவே பெண்கள் பாக்டீரியாவை வெளியேற்ற அந்த இடத்தை முன்னிருந்து பின்பக்கமாக சுத்தம் செய்யுங்கள்.

அதிகமாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும், அதனால் பாக்டீரியாவை சிறுநீர் மூலம் வெளியேற்றவும் உதவும்.

காற்றோட்டமான துணிகளை அணிவது நல்லது. அப்போது தான் அந்த இடங்களில் பாக்டீரியா அல்லது ஈஸ்ட் போன்ற கிருமிகளை வெளியேற்ற முடியும்.

முக்கியமாக செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் கைகளை கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருவேளை செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினால் வேலை முடிந்த பின்னர் அதனை சூடு நீரை பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

உடலுறவு வைத்துக்கொண்ட பின்னர் ஏதேனும் தொந்தர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து STD பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உடலுறவுக்கு பின் என்ன செய்யணும்? செய்யக்கூடாது? | Things to do after Sex in TamilRepresentative Image

என்ன செய்ய கூடாது?

உடலுறவு வைத்துக் கொண்ட பின்னர் நீங்கள் சென்சிடிவ் ஸ்கினாக இருந்தால் சோப்பை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் தண்ணீர் அல்லது ப்ரீ பேக்கேஜ் செய்யப்பட்ட திரவங்களுடன் யோனிக்குள் [inside their vagina] சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி செய்தால் யோனியைப் பாதுகாக்கும் பாக்டீரியாக்களின் இயற்கையான சமநிலையை சீர்குலைந்து விடும். இதனால் நமக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மருந்துக் கடைகளில் தனிப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்காக விற்பனை செய்யப்படும் வைப்ஸ், கிரீம்கள் மற்றும் ஸ்ப்ரேக்களை தவிர்ப்பது நல்லது.

மிகவும் டைட்டான உள்ளாடைகளை போடுவதை தவிர்த்துவிடுங்கள்.

நீங்கள் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் வேற யாருக்கும் அதனை தர வேண்டாம். அதனால் தொற்று பரவலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்