Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியவை. ஒவ்வொரு ஆப்டிக்கல் இல்யூசன் படங்களிலும் உள்ள மாயை உருவப்படங்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கண்விழி பிதுங்கி, மூளையை கசக்கி, உற்றுக் கவனித்தால் மட்டுமே அதில் மறைந்திருக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும்.
இம்மாதிரியான சவாலில் ஒரு சிலரே சரியான விடையை சொல்கிறார். அந்த வகையில், சமூக ஊடங்களில் ஏராளமான பயனர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் இம்மாதிரியான புதிர் விளையாட்டுகளை ரசித்தும் வருகின்றனர்.
அந்த வகையில், இன்று ஒரு வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது. இதில் பல விலங்குகள் மங்கலாக எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இடம்பெற்றுள்ளன.
கணினியால் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஆறு விலங்குகள் பதுங்கியிருக்கின்றன. மேலும் நீங்கள் இதில் முதலில் எந்த விலங்கை பார்க்கிறீர்களோ, அது உங்கள் ஆளுமையைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது. இந்த ஆப்டிக்கல் இல்யூசன் படத்தை நன்றாக உற்று பார்த்தால், பட்டாம்பூச்சி, நாய், ஓநாய், பருந்து, புறா, குதிரை போன்று மொத்தம் ஆறு விலங்குகள் இருக்கும். ஆனால், அதை கண்டுபிடிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.
சரி இப்போது முதலில் நீங்க எந்த விலங்கை பார்க்கிறீர்களோ அதை வைத்து உங்களுடைய குணமும், ஆளுமையும் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஓநாய் - நீங்கள் ஒரு தவறுக்கு விசுவாசமாக இருப்பவர் என்று அர்த்தம்.
பருந்து - முதலில் பருந்தை பார்த்தால், நீங்க உங்க பொறுப்புகளை ஏற்க விரும்பமாட்டீர்கள். எப்போது உங்களுக்கு பிடித்த வழியில் தான் செய்வீர்கள்.
புறா - முதல் பார்வையில் புறா தெரிந்தால், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவர். இப்படி இருப்பவர் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் அமைதியாக கையாள முயற்சி செய்வார்.
குதிரை - குதிரையை முதலில் பார்த்தால், எப்போதும் சுதந்திரமாக இருக்க நினைப்பவர் என்று அர்த்தம். ஒரு சாதாரண மனித வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். எப்போதும் தன் வழியில் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுபவர்.
பட்டாம்பூச்சி - முதலில் பட்டாம்பூச்சியை பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு இயல்பிலேயே அதிக நம்பிக்கையுடன் இருப்பவர். தன்நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதோடு, மற்றவர்கள் வளரவும் பேருதவியாக இருப்பவர். ஆக மொத்தத்தில் திறமைசாலி.
நாய் - முதலில் நாயை பார்த்தால், அவரை நம்பும் ஒரு நபருக்கு எந்த நேரத்திலும் விசுவாசமானவராகவும், வழிதுணையாகவும், பாதுகாவலராகவும் இருப்பார்கள்.
சரி, உங்க பர்சனாலிட்டி பற்றி தெரிந்துக் கொண்டீர்களா? அப்போ அடுத்தது என்ன… உங்க நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இதை ஒரு ஷேர் செய்யலாமே. அவர்களும் தெரிந்துக் கொள்ளட்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…