இந்த வருடப் பொங்கல் பண்டிகையை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், சுவையாகவும் எப்படிக் கொண்டாடுவது என யோசிக்கிறீர்களா?. இதே இந்த கோதுமை பொங்கலைச் செய்வது எளிமையாகவும் மற்றும் சுவை மிக்கவையாகவும் இருக்கும். சரிவாங்க கோதுமை பொங்கல் எப்படிச் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
✥ உலர்ந்த திராட்சை - 2டீஸ்பூன்
✥ முந்திரி -2டீஸ்பூன்
✥ பாதாம் - 2டீஸ்பூன்
✥ நெய் - 1டேபிள்ஸ்பூன்
✥ தேங்காய் -அரை மூடி
✥ உடைத்த கோதுமை - 1கப்
✥ பாசிப் பருப்பு- 1/4 கப்
✥ வெல்லம் - 1கட்டி
✥ ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
✤ முதலில் அரை மூடி தேங்காயைத் துருவி ஒரு டீஸ்பூன் அளவு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
✤ அடுப்பில் பாத்திரத்தை வைத்து, உடைத்த கோதுமை மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
✤ வறுத்த கோதுமையுடன் மூன்று கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக மசியும் வரை வேக விடவும்.
✤ ஒரு கட்டி வெல்லத்தை உடைத்து சிறிது சிறிது துண்டுகளாக எடுத்துக் கொண்டு, அதை வேக வைத்த கோதுமையில் சேர்த்து நன்றாக வெல்லம் கரையும் வரை கிளறவும்.
✤ மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்றாக வதக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
✤ வேகவைத்த கோதுமை, வெல்லத்தில் இந்த வதக்கிய முந்திரி, தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால் கோதுமை பொங்கல் ரெடியானது. உடலுக்கு ஆரோக்கியமான கோதுமை பொங்கலைக் கரும்புடன் சாப்பிட்டு மகிழுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…