Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

ஆண்கள், பெண்களுக்கு எந்த தினம் எண்ணெய் குளியலுக்கு உகந்தது..! இதனால், என்ன பலன்கள்..? | Oil Bath On Which Days

Gowthami Subramani Updated:
ஆண்கள், பெண்களுக்கு எந்த தினம் எண்ணெய் குளியலுக்கு உகந்தது..! இதனால், என்ன பலன்கள்..? | Oil Bath On Which DaysRepresentative Image.

அறிவியல், ஆன்மீகம் இரண்டுமே நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய அன்றாட செயல்கள் அனைத்திலும் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டும் கலந்துள்ளது. இவை நம் உடல் நலனுக்கு ஏற்ற வகையிலேயே அமைகிறது. அந்த வகையில், எண்ணெய் குளியல் செய்வது நம் உடல் நலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் பின்னே ஜோதிட மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. எந்தெந்த தினங்களில் எண்ணெய் குளியல் செய்தால்,எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். மேலும், இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விதிகள் குறித்தும் பார்க்கலாம்.

எண்ணெய் குளியலின் முக்கியத்துவம்

முதலில் எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம். “வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என முன்னோர்கள் கூறுவர். அதாவது, வாணியன் என்றால் எண்ணெய் வித்துக்களைச் செக்கில் ஆட்டி எண்ணெய் கொடுப்பவர்களையேக் கூறுவர். இவர்களுக்கு வாணியர்கள், செக்கார், செக்காளர்கள் என்ற பெயர்களும் உண்டு. இதில், உடல் நலத்தில் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வைத்தியனுக்கு பணம் கொடுப்பதை விட, உடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு எண்ணெய் ஆட்டித் தரும் செக்காளனுக்கு பணம் கொடுத்து எண்ணெய் வாங்கலாம் என்று பொருள் தருகிறது.

எண்ணெய் குளியலின் நன்மைகள்

பொதுவாக, எண்ணெய் தேய்த்து குளிப்பதால், பின்வரும் பலன்களைப் பெறலாம்.

எலும்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனைக்குத் தீர்வு தரக்கூடியது.

உடல் வெப்பத்தினால், உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

நரம்பு மற்றும் சருமப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

முடி கொட்டுவது நிற்பதுடன், நீளமாக வளரும்.

நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்

அதிலும் குறிப்பாக நல்லெண்ணெயில் குளிப்பதால், உடல் நலத்திற்கு சிறந்தப் பலன்களைத் தரவல்லது.

பொதுவாக, சனி பகவானுக்கு உரிய தானியம் எள் ஆகும். இந்த எள்ளில் இருந்து உருவாக்கப்படும் நல்லெண்ணெய்யை உடலில் தேய்த்து குளித்தால், உடலில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியலாக இருப்பினும், எண்ணெய் ஸ்நானம் செய்வதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனியே பலன்கள் உண்டு.

ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய உகந்த நாள்கள்

திங்கள் முதல் சனிக்கிழமைகளில் வரை ஆண்கள் எந்தெந்த தினங்களில் எண்ணெய் குளியல் செய்தால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்.

திங்கள்கிழமை: இந்த தினத்தில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால், முடக்கு வாதம் வரும்.

செவ்வாய் கிழமை: முதுகெலும்பு பிரச்சனைகள் மற்றும் மாலைக்கண் நோய் வரலாம்.

வியாழக்கிழமை: கால் குடைச்சல் ஏற்படலாம்.

வெள்ளிக்கிழமை: முடக்கு வாதம் வர வாய்ப்புண்டு.

புதன் மற்றும் சனிக்கிழமை: இந்த இரு தினங்களும் ஆண்கள் எண்ணெய் குளியல் செய்ய மிகவும் ஏற்ற தினங்களாகும்.

பெண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய உகந்த நாள்கள்

ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை பெண்கள் எந்தெந்த தினங்களில் எண்ணெய் குளியல் செய்தால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்.

ஞாயிற்றுக்கிழமை: இந்த தினத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்தால் அழகும், உடல் வடிவும் போய் விடும்.

திங்கள்கிழமை: அதிகம் பொருள் சேரும்.

செவ்வாய்க்கிழமை: பெண்கள் செவ்வாய்க்கிழமை எண்ணெய் குளியல் செய்தால் குடும்பத்திற்கு ஆகாது.

புதன்கிழமை: இத்தினத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்தால் கல்வி வளரும் மற்றும் புத்திக்கூர்மை உண்டாகும்.

வியாழக்கிழமை: இந்த தினத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்தால், அறிவு மங்கும். பெண்கள் வியாழக்கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாது.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் புகழ் உண்டாகும், செல்வம் அதிகரிக்கும்.

சனிக்கிழமை: இந்த சனிக்கிழமை தினத்தில் பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கும். மேலும், நல்லெண்ணெய் குளியலுக்கு மிகவும் ஏற்ற தினம் சனிக்கிழமையே ஆகும்.

குறிப்பு: மேற்கண்ட சில விஷயங்கள் இருப்பினும், பொதுவாக பிறப்பு, இறப்பு காலங்கள், அமாவாசை போன்ற தினத்தில் வெந்நீரில் குளிக்கக் கூடாது. அதே போல, பிறந்த நாள், கிழமை, நட்சத்திரம் போன்றவற்றிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்பது ஐதீகம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்பது கிடையாது. இவை மற்ற மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்