Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

'நான் புரட்டாசி மாசம் கறி சாப்பிடமாட்டேன் பா' - இதுக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு? | Purattasi Month 2023 Fasting  

Nandhinipriya Ganeshan September 13, 2023 & 16:30 [IST]
'நான் புரட்டாசி மாசம் கறி சாப்பிடமாட்டேன் பா' - இதுக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு? | Purattasi Month 2023 Fasting  Representative Image.

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். பொதுவாக, இம்மாதத்தில் பலர் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் புரட்டாசி மாதம் உண்மையாக அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம். 

பொதுவாக, புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அந்த ஒரு மாதம் முழுவதும் கறிகடைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலர் அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். 

புரட்டாசி மாதம் 2023 அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம்:

பொதுவாக, புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே வெயிலும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இந்த தட்பவெப்ப நிலையில் நோய்கள் மிக எளிதில் நம்மை தாக்கும்.

விலங்குகளையும் விட்டுவைக்காது இந்த கிரிமிகள். மேலும், சூரியனும் அடிக்கலாமா வேண்டாமா என்று வந்து வந்து போகும். இது போன்ற காலத்தில் மாமிச உணவுகள் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்று ஆகியவை ஏற்படும்.

இதை அறிந்த நம் முன்னோர்கள், நமக்கு எப்படி சொன்னால் நம் மண்டைக்கு ஏறுமோ அப்படி சொல்லிய ஒரு கருத்து தான் இந்த புரட்டாசியில் அசைவத்தை சாப்பிட கூடாது என்பது. இதை தான் நாம் இன்றுவரை பெருமாள் என்ற பெயரில் கடைப்பிடித்து வருகிறோம்.

இதையே அறிவியல் காரணம் என்று சொல்லிருந்தால், நம் காதுலையே போட்டுக் கொள்ள மாட்டோம். இப்படி செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று சொன்னால் தான் நம்மில் பலரும் நம்புவார்கள். நம் முன்னோர்கள் உண்மையில் புத்திசாலிகள் தான். 

மேலும், இந்த மாதத்தில் விரதம் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் அருந்துவார்கள். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்த காலநிலையில் மிகவும் எளிதாக நோய் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் இந்த தீர்த்தத்தை குடிப்பதன் மூலம் நோய் தொற்று வராமல் நம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும். 

இதுதாங்க புரட்டாசி மாதத்தில் கறி சாப்பிடாமல் இருப்பதற்கான உண்மையான காரணம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்