Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan September 25, 2022 & 16:00 [IST]
குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முடி உதிர்வை தடுப்பது எப்படி?Representative Image.

Skin Shining Tips in Tamil: குளிர்காலம் என்பது அழகான பருவநிலைகளில் ஒன்று. அது நம் தலைமுடி மற்றும் தோலைத் தவிர, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மிகவும் அழகாக மாற்றுகிறது. ஏனெனில், இந்த காலநிலையில், நம்முடைய சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை ரொம்ப பாதிக்கிறது. தோலில் வெடிப்பு, தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் என சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, இந்த காலகட்டத்தில் உங்க தலைமுடி மற்றும் சருமத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. 

உங்க தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உதாரணமாக, கேரட் மற்றும் பீட்ரூட் சூப் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் நீங்கள் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த குளிர்கால உணவாகும். கேரட் மற்றும் பீட்ரூட் தாதுக்களின் நல்ல மூலமாகும், அவை ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கவும், சரும பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும். இந்த சூப் சருமத்தை மேம்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு பயனளிக்கிறது. 

இது சருமத்தை நீரேற்றமாக வைத்து, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற (face glowing tips in tamil) உதவுகிறது. பொதுவாக, பீட்ரூட் உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் வளருவதற்கு உதவுகிறது. அதோபோல, கேரட் சருமத்தின் பொலிவை பராமரிக்க உதவுகிறது. இந்த இரண்டு காய்கறிகளிலும் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், அவை தோலின் நிறத்தை இயல்பாக்குகின்றன. எனவே, வறண்ட சருமம் (bright face tips in tamil) மற்றும் உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க, இனி தாமதிக்காமல் இந்த சூப்பை உங்க அன்றாட உணவில் சேர்த்து அதன் அற்புதமான பலன்களை அனுபவிக்கவும். இந்த சூப்பை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1

கேரட் - 1

தக்காளி - 1

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பே இலை - 1

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

பூண்டு - 1 பள்ளு

பெரிய வெங்காயம் - 2

கருப்பு மிளகு தூள் - 1 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தண்ணீர் தேவையான அளவு 

அலங்கரிக்க புதினா அல்லது கறிவேப்பிலை 

செய்முறை:

முதலில், ஒரு பிரஷர் குக்கரில், வெண்ணெயை சூடாக்கி, 1 பே இலையை சேர்த்து, அது வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு 1 டீஸ்பூன் இஞ்சி விழுது, 2 கிராம்பு பூண்டு, வெங்காயத்தை சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். 

இப்போது, நறுக்கிய பீட்ரூட், கேரட் மற்றும் 1 தக்காளி சேர்த்து, ½ ஸ்பூன் உப்பு சேர்த்து 4 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின், அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். 

அதை வடிகட்டி ஆற வைத்து, காய்கறிகளை மசாலாப் பொருட்களுடன் ஒரு பிளெண்டரில் போட்டு, மிருதுவான பேஸ்டாக அரைக்கவும்.

பின்னர், அந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி, வடிகட்டிய தண்ணீரை ஊற்றி, வேகவிடவும். அதில் 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கடைசியாக, புதினா இலையை தூவி, சூடாக பரிமாறவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்