உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணிக் காப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களைப் போன்றே பெண்களும் தங்கள் உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்க விரும்புகின்றனர். இதனால் பெண்களும் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை நாள்தோறும் செய்து வருகின்றனர். ஆனால், மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்யலாமா என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. இதில், பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகா செய்யலாமா என்பது குறித்து காணலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் சில அசைவுகள் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதே சமயம், மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு உடல் பலவீனம், சோர்வு போன்றவை ஏற்படும். இதன் காரணமாகவே, இந்த கால கட்டத்தில், பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்தால் அவை இன்னும் அதிகரித்து விடுமோ என்ற பயத்துடனும், சந்தேகத்துடனும் உள்ளனர். எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா என்பதையும், மறுபுறம் இந்த காலகட்டங்களில் அதிகளவு உடற்பயிற்சிகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றைக் காணலாம்.
பொதுவாக மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு மனநிலை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது அவர்களைச் சோர்வடையச் செய்வதுடன், வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து சற்று தள்ளி வைக்கிறது. எனவே, இந்த கால கட்டங்களில் அதற்கு ஏற்றாற் போல யோகா செய்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று தான். ஆனால், இந்த நிலையில் மனநிலை பாதிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்குவதற்கு யோகா சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன நலம் தொடர்பான பாதிப்புகளுக்கு சில யோகா பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் செய்வதன் மூலம், பிரச்சனைகள் விரைவில் தீரும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே, யோகா மனதிற்கு திருப்தியை அளிப்பதுடன், அமைதியைத் தருகிறது. அதே நேரத்தில், அவரவர்களின் உடல்நிலையைப் புரிந்து கொண்டு அதன்படி செயலாற்றுவது சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…