Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் – 2... | Ponniyin Selvan 2 Ott

Gowthami Subramani Updated:
நீண்ட எதிர்பார்ப்புகளுடன் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் – 2... | Ponniyin Selvan 2 OttRepresentative Image.

பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு, மாபெரும் படைப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பகுதிகளாக வெளிவந்த இந்த திரைப்படத்தில், முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும், இரண்டாவது பாகமானது இந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் வெளியானது.

இயக்குநர் மணிரத்னம் அவர்களின், இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் முதல் பாகம் வெளிவந்த பிறகு, இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இரண்டாவம் பாகம் வெளிவந்த பிறகு, முதல் பாகத்தைப் போலவே இந்த பாகமும் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறியது. மேலும், படம் திரையரங்கில் ஓடி அதன் 25 நாள்களை நிறைவு செய்தது.

இந்நிலையில், இந்த இரண்டாம் பாகமானது ஓடிடி-யில் வெளியாக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓடிடி பிரீமியரைத் தொடங்க பணம் செலுத்தும் அடிப்படையில், இந்த திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் மே மாதம் 26 ஆம் நாள் முதல், பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும், இதன் ஒரு வாரத்திற்கு கட்டண முறையில் தொடர்ந்து ஸ்ட்ரீமிங் செய்யப்படும். மேலும், ஜூன் 2 ஆம் நாள் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் சந்தாதாரர்கள் இலவசமாகக் காணலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்