விக்ரம் வேதா மூலம் இந்தியா முழுக்க பிரபலமான புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள வெப் தொடர்தான் இந்த வதந்தி. எஸ் ஜே சூர்யாவுடன் இன்னும் பலர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் இன்றுமுதல் ஒளிபரப்பாகி வருகிறது. வாருங்கள் இதன் நிறை குறைகளைக் காண்போம்.
இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்
தயாரிப்பு - புஷ்கர் காயத்ரி
இசை - சைமன் கே கிங்
ஒளிப்பதிவு - சரவணன்
வெளியீடு - அமேசான் ப்ரைம் வீடியோஸ்
நடிப்பு - எஸ் ஜே சூர்யா, நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா, லைலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், ஸ்மிருதி வெங்கட்
கதைக்களம்:
கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில் அந்த படத்தின் ஹீரோயின் திடீரென இறந்துவிடுகிறார். அவரின் உடல் அதிகாலையில் படப்பிடிப்பு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
பிரபல ஹீரோயின் மரணம் பற்றிய செய்தி நாடு முழுக்க காட்டுத் தீ போல பரவ திடீர் திருப்பமாக ஹீரோயின் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த படப்பிடிப்பு ஏற்பாட்டாளர், அவரிடம் பேசுகிறார்.
ஹீரோயின் தன் காதலனுடன் பெங்களூருக்கு வந்திருப்பதாகவும், தன் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தயாரிப்பாளர் இப்படி செய்துவிட்டாரா என கோபம் கொள்கிறார். இதனை காவல்துறையினரிடம் தெரிவிக்கவே, விசாரணை சூடு பிடிக்கிறது.
வெலோனி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர். அவர்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என காலையில் காவல் துறை கொடுத்த மரண செய்தியின் பேப்பர் கட்டிங்கைக் கொண்டு வந்து நிற்கிறார் ஒருவர். இதனிடையே காவல்துறை உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு உள்ளூர் காவல் அதிகாரி விசயத்தைக் கூற, அவரும் குடும்பத்தினரை அழைத்து வரச் சொல்கிறார்.
வேலோனியின் குடும்பத்தினரும் வந்து அவர்தான் என்பதை உறுதி செய்ய, அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை மிகவும் விறுவிறுப்புடன் நகர்த்துகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…