Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? 

Nandhinipriya Ganeshan November 01, 2022 & 19:00 [IST]
மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? Representative Image.

4th Month Pregnancy in Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பத்தின் நான்காவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துவார்கள். ஏனென்றால், கர்ப்பம் என்பது இரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிலும், உறங்கும் நிலையில் சற்று கவனம் கூடுதலாகவே இருக்க வேண்டும். 
 

மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? Representative Image

கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் உடலில் உள்ள மூட்டுகள் தளர்ந்துபோகும். கனமான பொருட்களை சுமக்கும்போது வலியும் வேதனையும் ஏற்படுவதாக நீங்க உணரக்கூடும். அதனால், உங்களுக்கு அதிகமான ஓய்வு தேவை. முடிந்தவரை மதிய நேரத்திலும் தூங்க முயற்சி செய்யுங்கள். ரொம்ப களைப்பாக இருந்தால் இரவில் சீக்கிரமே தூங்கச் சென்றுவிடுங்கள். அப்படி தூங்கும்போது உங்களின் தூக்கம் குழந்தையை பாதிக்காதவாறு இருக்கவேண்டும். இந்த மாதிரியான சமயத்தில் தூக்கமின்மை பிரச்சனை என்பது சாதாரணம் தான். இருப்பினும் தூங்க வேண்டும். நீங்க கர்ப்பம் தரித்து மூன்று மாதங்கள் வரை வயிறு சின்னதாக இருந்ததால் பெரிதாக உங்களுக்கு வேறுபாடு தெரியாமல் இருந்திருக்கும். 

மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? Representative Image

ஆனால், நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும். வயிறும் சற்று பெரியதாகும். ஒரு சில பெண்களுக்கு மல்லாந்து படுக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், கர்ப்பக் காலத்தில் அப்படி படுத்தால் கருப்பை இரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சு திணறல் மற்றும் இரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், அப்படி படுக்குபோது உடம்பிலுள்ள முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். இதனால், குழந்தை வயிற்றில் மூச்சுவிட சிரமப்படும். 

மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? Representative Image

எனவே, இந்த சமயத்தில் மல்லாந்து படுப்பதோ மற்றும் குப்புற படுப்படுத்தோ கூடாவே கூடாது. எப்போதும் கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதே சிறந்தது. ஒரே மாதிரியாக படித்தால் தோள்பட்டை வலி இருக்கும் என்பதால் சிறிது நேரம் மட்டும் வலது புறம் படுத்துக்கொள்ளலாம். திரும்பிப்படுக்கும்போதும் எழுந்து அமர்ந்து தான் திரும்பிப்படுக்க வேண்டும். 

மகப்பேறும் மறுபிறப்பும் 23: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்..? Representative Image

இது தாய், சேய் இருவருக்குமே நன்மைப்பயக்கும். கர்ப்பிணிகள் தூங்குவதற்காக பிரத்யேகமாக தலையணை விற்பனை செய்யப்படுகிறது அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அவை சி மற்றும் யு வடிவில் இருக்கும். இதை இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்துக் கொண்டால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். அதேபோல், முதுகிற்கு பின்புறமும், வயிற்றுக்கீழும் மென்மையான தலையணைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், நன்றாக தூக்கம் வரும். இதுவே கருவின் வளர்ச்சிக்கும் சிறந்தது கூட. 

Also Read: மகப்பேறும் மறுபிறப்பும் 26: ஐந்து மாத கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..

Tag: How To Sleep In 4th Month Of Pregnancy | Sleeping Position During Pregnancy First 4 Months | How To Sleep During The Second Trimester Of Pregnancy | Second Trimester Pregnancy Sleeping Position | Sleeping Position During Pregnancy | Sleeping Position During Pregnancy In Tamil | Karpini Pengal Thoongum Murai | கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்