இவ்வுலகில் நமக்கு எத்தனையோ உறவுகள் கிடைத்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடுணையே இல்லை. வீட்டில் எல்லோரையும் அன்போடும், அக்கறையோடும் அரவணைப்பவள் நம்முடைய அம்மா தான். நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம்மை ரசித்தவள். இன்பம், துன்பம் என எதுவந்தாலும் நம் அருகில் நின்று அனைப்பவள். தன்னுடைய ஆசை, விருப்பு, வெறுப்பை மறந்து குடும்பத்தையே தன் கையில் தாங்கிக் கொண்டு ஓய்வே இல்லாமல் உழைக்கும் அன்புள்ளம் கொண்ட நம்முடைய அம்மாவை வணங்குவதற்காகவே வரும் நாளே 'அன்னையர் தினம்'. ஒவ்வொரு வீட்டிலும் நடமாடும் தெய்வமாக விளங்கும் நம்முடைய அம்மாவுக்கு இந்த நாளில் அன்போடு வாழ்த்துக்களையும் பகிர்ந்து மகிழ்ச்சிப்படுத்துவோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…