ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசியக்கோப்பை கால்பந்து போட்டியில் 3வது தகுதி சுற்று நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டியின் 83ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து இந்திய அணியை முன்னேற செய்தார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் கோல் அடித்து ஸ்கோரை சமநிலை செய்தார்.
இதனையடுத்து போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் இந்திய வீரர் சாஹல் அப்துல் ஒரு கோல் அடித்தால் இதனால் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்தது. இந்த வெற்றியை இந்திய அணியினர் கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை கீழே தள்ளி விட்டனர். இந்திய வீரர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர். அப்போது இந்த சண்டையை தடுக்க வந்த இந்திய அணியின் கோல் கீப்பர் கீப்பர் குர்பிரித் சிங்கை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தாக்கினர்.
இதையடுத்து இந்திய வீரர்கள் சுற்றி வளைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களை பதிலுக்கு தாக்க முயன்றதால் கால்பந்து மைதானமே சண்டைக் களம் போல் மாறியது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டு நடுவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர். இரு நாட்டு அணி வீரர்கள் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் ஆசியக்கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா விளையாடுவது உறுதியாகியுள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…