Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Priyanka Hochumin Updated:
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்Representative Image.

கால்பந்து உலகின் மிக முக்கிய ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேறினார். இந்த தகவலை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரொனால்டோ அவர்கள் கிளப் போட்டியில், 2003-ம் ஆண்டு முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், அதற்கு பிறகு 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த அணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடிய அவர், 2021 ஆம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் அணியுடன் இணைந்தார்.

இந்த அணியில் விளையாடிக் கொண்டிருந்த போது ரொனால்டோவிற்கும் பயிற்சியாளருக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மிகுந்த வேதனையடைந்த ரொனால்டோ - தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இது குறித்து ரொனால்டோ அளித்த பேட்டியில், " என்னை ஏன் இவ்ளோ மோசமாக பயிற்சியாளர் விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. மேலும் எரிக் அவர்கள் எனக்கு மரியாதை தரவில்லை, அதனால் அவருக்கும் நான் மரியாதை தர மறுத்திவிட்டேன். இந்த அணியில் நான் இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை" என்று வேதனையாக கூறியுள்ளார்.

இப்படி வெளிப்படையாக பேசியதால் ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். பல ஆலோசனைகளுக்கு பிறகு ரொனால்டோவை வெளியேற்ற முடிவு செய்ததாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரொனால்டோ அவர்கள் வெளியேறுவார் என்று தெரிவித்தனர். மேலும் எங்கள் அணிக்காக சிறப்பாக விளையாடிய ரொனால்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்