உலகளாவிய டி20 கிரிக்கெட் போட்டியானது கிரிக்கெட் ஆர்வலர்களால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆகும். இந்த போட்டிகளைக் காண, அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் போட்டியானது ஜூலை 20 ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 6 ஆம் நாள் வரை கனடாவில் நடைபெற உள்ளது. இந்த டி20 லீக்கிற்கான வீரர் டிராஃப்ட் ஜூன் 13 ஆம் நாள் நடைபெற்றது. இதில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மார்க்யூ வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. முந்தைய பதிப்புகளின் படி, கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா, ஆண்ட்ரே ரசல், யுவராஜ் சிங், ஷாஹித் அப்ரிடி, ஷோயப் மாலிக், கீரன் பொல்லார்ட், மற்றும் பிரண்டன் மெக்கல்லம் போன்ற வீரர்கள் மார்க்யூ வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியிலும் முழு மற்றும் ஐசிசி அசோசியேட் உறுப்பினர்களைச் சேர்ந்த 16 வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போட்டியானது புதிய தலைமுறை ரசிகர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த தொடரில் “ப்ராம்ப்டன் வோல்வ்ஸ்” அணியில் விளையாடுவதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான “ஹர்பஜன் சிங்” ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…