இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஐந்து நோ-பால்களை வீசியதால் அர்ஷ்தீப் சிங்குக்கு நேற்று 2வது டி20 ஒரு மோசமான போட்டியாக மாறி இருந்தது. இதற்கு பதிலளித்த கேப்டன் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் அடிப்படைகளை மனதில் கொள்ள வேண்டும், அவற்றிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
போட்டியன்று யார் வேண்டுமானாலும் மோசமான நாளை அனுபவிக்கலாம், ஆனால் எந்த வடிவத்திலும் நோ-பால் வீசுவது குற்றம் என்று அவர் ஒப்புக்கொண்டார்.
"உங்களுக்கு ஒரு நல்ல நாள் இருக்கலாம், கெட்ட நாளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அடிப்படை விஷயங்களில் இருந்து விலகி இருக்கக் கூடாது. அர்ஷ்தீப்புக்கு, இந்த சூழ்நிலையில், இது மிகவும் கடினம். கடந்த காலத்திலும் அவர் நோ-பால்களை வீசியுள்ளார்." என போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியில் பாண்டியா கூறினார்.
அர்ஷ்தீப் சிங் இரண்டு ஓவர்களில் ஐந்து நோ-பால்களை வீசினார். மேலும் 37 ரன்கள் கொடுத்தார். இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இவரது மோசமான பெர்பார்மன்ஸ் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அறிமுக வீரர் ராகுல் திரிபாதி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டது குறித்தும் பாண்டியா பேசியுள்ளார். "ராகுல் 3-வது இடத்தில் விளையாடுவது வழக்கம். யாராவது உள்ளே வரும்போது, அவர்களுக்கு வசதியாக ஒரு ரோலை வழங்க விரும்புகிறோம். அதனால்தான் அவர் நம்பர்-3இல் பேட் செய்தார்." எனக் கூறினார்.
தொடரின் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஜனவரி 7ம் தேதி நாளை நடைபெற உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…