உலகம் முழுவதும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சொந்தமான சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆன்லைன் மோசடி கும்பலால் சூறையாடப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, ஐசிசி ஆன்லைன் மோசடிக்கு பலியாகியுள்ளது மற்றும் ஆன்லைன் சைபர் தாக்குதலின் கீழ் 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 கோடி) மோசடி செய்பவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆன்லைன் மோசடி வழக்கு குறித்து ஐசிசி அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிக்கு ஐசிசி ஒருமுறை மட்டும் பலியாகிவிடவில்லை. சமீப காலங்களில் அந்த அமைப்பின் நிதி நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.
துபாயை தளமாகக் கொண்ட ஐசிசி தலைமையகத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து அதிகாரிகளும் தாங்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகிறார்கள் என்று சந்தேகிக்காத வகையில், சாதுர்யமாக நடந்த இந்த மோடி கடந்த வியாழனன்று கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த ஆன்லைன் மோசடி அமெரிக்காவில் இருந்து இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐசிசி தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…