Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

முன்னாள் வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு.. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவிப்பு!!

Sekar Updated:
முன்னாள் வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு.. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவிப்பு!!Representative Image.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு ரூ. 1.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பயனடைகின்றனர்.

எனினும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முதல்-தர போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே பிசிசிஐயின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரால், பிசிசிஐயின் இந்த பலன்களை பெறமுடியாத சூழல் தான் நிலவுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்ஷுமான் கெய்க்வாட் இது குறித்து கூறுகையில், "இது எங்கள் வாரியத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய தொடக்கமாகும். கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு டாப்-அப் மருத்துவமனையில் சேர்க்கும் காப்பீட்டை நீட்டித்தோம். 

இந்த முறை, நாங்கள் ஒரு படி மேலே சென்று ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சம் முழு காப்பீட்டை வழங்கியுள்ளோம்.” என்று கூறினார்.

அவர் மேலும், "தற்போது, காப்பீட்டைப் பெற விருப்பம் தெரிவித்த 109 உறுப்பினர்களுக்கு காப்பீட்டை நீட்டித்துள்ளோம். அவர்கள் அனைவரும் 5 முதல் 9 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளனர். எதிர்காலத்தில், இதுபோன்ற இன்னும் பல உறுப்பினர்களுக்கு இந்த காப்பீடு நீட்டிக்கப்படும்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முற்பட்ட ஆண்டுகளில், நிதி மற்றும்/அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சத்தை நேரடியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்