Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in Tamil

Gowthami Subramani Updated:
தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in TamilRepresentative Image.

பொங்கல் திருவிழாவின் முக்கிய விளையாட்டான “ஜல்லிக்கட்டு” தமிழர்களின் பாரம்பரிய மிக்க விளையாட்டாகும். திருச்சி, கோவை, திண்டுக்கல் என எத்தனையோ இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்தாலும், மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கள் மிகப் பிரபலமானவை. காளைகளை அடக்கும் காளையர்களைக் காண மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளையாட்டைக் காண ஆவலுடன் இருப்பர்.

தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in TamilRepresentative Image

ஜல்லிக்கட்டு பெயர் வரக்காரணம்

ஜல்லிக்கட்டு என்பது இப்போது நம் அனைவராலும் கூறப்படும் பெயராக இருந்தாலும், ஏறு தழுவுதல் என்ற அழகான வார்த்தையே ஜல்லிக்கட்டாக கூறப்படுகிறது. இதில் ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கக் கூடியது. மனிதர்கள் மாட்டை அடக்குவது அல்லது அதன் கொம்பைப் பிடித்து வீழ்த்தும் விளையாட்டே ஏறு தழுவுதல்.

ஆரம்ப காலத்தில் “ஏறு தழுவுதல்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் நாணயங்களான சல்லிக் காசுகளை துணி ஒன்றில் முடிந்து வைத்து அதனை காலையின் கொம்பில் கட்டி விடுவர். இதில் காளையை அடக்குபவர்களுக்கு அந்த காலையின் கொம்பில் கட்டப்பட்டுள்ள சல்லிக் காசுகளை எடுத்துக் கொள்ளலாம். இதுவே, தற்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in TamilRepresentative Image

விதவிதமான ஜல்லிக்கட்டு

காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டில் மதுரை அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், தென் மற்றும் வட தமிழகங்களில் கோனார்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைபெறுகிறது. இதில் மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் வழியாக காளைகள் வெளியேறும். இதனை இளைஞர்கள் விரட்டிச் சென்று காளையின் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்வர்.

இதுவே, வட தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டானது வடம் மஞ்சுவிரட்டு எனக் கூறப்படுகிறது. இதில் காளையை 20 அடி நீளக் கயிற்றால் கட்டி, அதன் இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிப்பர். ஒரு சிலர் மட்டும் காளையின் முன் நின்று அதில் உள்ள பரிசுப் பணத்தை எடுப்பதற்கு முயற்சிப்பர்.

இப்படி பல்வேறு வகைகளில் நடக்கும் ஜல்லிக்கட்டானது, பண்டைய காலத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே விதமாகவே நடந்தது. பண்டைய காலத்தில் நடந்த ஆயர்களின் திருமணத்தில் கலந்த ஏறுதழுவுதல் என்றே அழைப்பர்.

தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in TamilRepresentative Image

காளையை அடக்குபவன் மணமகன்

முந்தைய காலத்தில், முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாகத் தேர்வு செய்வர். அதன் பின்னர், இந்த முறையைக் கைவிடுவதற்கு ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளைகளை அடக்க ஆரம்பித்தனர்.

ஆயர் இன மக்கள், மணமகனாக காளையை அடக்குபவனைத் தேர்வு செய்வதைத் தடுப்பதற்கான முக்கிய காரணம் ஆராயப்பட்டது. அதில், திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

தெரிந்த ஜல்லிக்கட்டும், தெரியாத ரகசியமும்! | Jallikattu History in TamilRepresentative Image

பல்வேறு நாடுகளில்

இது போன்று ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் எருது அடக்கும் விழாக்கள் நடைபெறுகிறது. ஆனால் அவை அனைத்துமே விளையாட்டாக மட்டுமே மதிப்பிடப்படுகிறது. ஆனால், வாழ்வியலின் கலாச்சாரமாகவும், வாழ்வியலில் வெளிப்பாடாகவும் இதனை எவரும் கருதவில்லை. முந்தைய காலத்தில் மக்கள் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றி வைத்திருப்பர். இதனையே சல்லி என்று கூறுவர். அதன் பிறகே, ஆங்கிலேயர் ஆட்சியில் காசுகளை கட்டியிருப்பர். இதனையே ஜல்லி என்பர். இவ்வாறு மாட்டின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளை வைத்தோ, அதன் கொம்புகளில் கட்டிய பரிசுப் பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப் பெயர் பெற்றது. இருப்பினும், மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், எருதுப் பிடி என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முந்தைய அழகான பெயர்களாகும்.

இது போன்று ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஏராளமான பெருமிதங்களைக் கூறலாம். இவ்வாறே ஜல்லிக்கட்டு தோன்றியதுடன், ஈராண்டு காலமாக தமிழர்களின் பழங்கால வாழ்க்கையை பறைசாற்றும் விதமாகவும், தமிழகத்தின் வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்