முகமது ஷமியின் மாஸ்டர் கிளாஸ் சீம் பவுலிங் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தால், ராய்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டியின் சிறப்பம்சங்கள்
முதலில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய பவுலர்களின் வீச்சை தாங்க முடியாமல் 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இது இந்தியாவுக்கு எதிரான அவர்களது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 109 ரன்கள் இலக்கை வெறும் 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. கேப்டன் ரோகித் சர்மா (51) மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் (35 நாட் அவுட்) ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சைத் தகர்த்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…