நம் தமிழ் மண்ணுக்கு என்று நிறைய பெருமைகள் உள்ளது. அதில் கலாச்சாரம், உணவு, இலக்கியம், மொழி, வீரம், ஆடை அலங்காரம், பண்டிகை என்று எக்கச்சக்கமான சிறப்புக்கள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உருவான விளையாட்டு போட்டி தற்போது ஒலிம்பிக்ஸ் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாம் மண்ணோடு கட்டிப்பிடித்து விளையாடும் "கபடி" போட்டி. கபடி என்றாலே தமிழர்களை அடிச்சிக்க முடியாது என்று உலகம் மக்கள் அறிவார்கள். ஏனெனில் அது நம் மண்ணில் உருவான விளையாடி நம் ரத்தத்தில் ஊறிப்போன விளையாட்டாகும்.
தை பொங்கல் பண்டிகை காலங்களில் கபடி போட்டி இல்லாமல் இருக்க முடியாது. மேலும் அதனை ஒரு விழாவாகவே ஏற்பாடு செய்து கொண்டாடுவார்கள். பரிசு மட்டும் இல்லாமல் பந்தயம் கட்டியும் இளைஞர்கள் விளையாடுவார்கள். ஏனெனில் அந்த போட்டியானது ஊரின் மானப்பிரச்னையாக கருதுகின்றனர். கபடி போட்டி ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனி தனியாக நடைபெறும். இந்த போட்டியும் முதலில் ஆண்களுக்கு மட்டும் என்று விதிமுறை இருந்தது. ஆனால் அவை அனைத்தையும் தகர்ந்து நம் முன்னோர்கள் பெண்களுக்கு சம உரிமையை மீட்டு கொடுத்தனர். அதனின் பலனாகத் தான் இன்றளவும் பெண்கள் தைரியமாக கபடி போட்டியில் உலகளவில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
நம் ஊரில் பொங்கல் பண்டிகையின் போது கபடி போட்டி நடைபெறுவது ஒரு வித சந்தோசத்தை கொடுக்கும். அதனை விளையாடுபவர்களைக் காட்டிலும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு தான் முழு மகிழ்ச்சி. இரண்டு அணிகள் மோதிக்கொள்வார்கள், மூச்சு விடாம, கபடி கபடி சொல்லிக்கொண்டே எதிர் அணியில் இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும். இறுதியில் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். பல பரிசுப் பொருட்களுடன் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவார்கள் நம் தமிழர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…