Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

மும்பையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்!!

Sekar Updated:
மும்பையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்!!Representative Image.

மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா செல்ஃபி எடுக்க மறுத்ததால், அவரையும், அவரது அவரது நண்பரின் காரை ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே ஷாவின் நண்பரின் கார் மீது தாக்குதல் நடத்தியதற்காக 8 பேர் மீது வடமேற்கு மும்பையில் உள்ள ஓஷிவாரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ப்ரித்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரைப் பின்தொடர்ந்து பணம் கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்குகளை போடுவதாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ப்ரித்வி ஷா, வடமேற்கு மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு உணவிற்குச் சென்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத குற்றவாளிகள் அவர்களிடம் வந்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தினர்.

ப்ரித்வி ஷா இரண்டு பேருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். எனினும் அதே குழு திரும்பி வந்து குற்றம் சாட்டப்பட்ட மற்றவருடன் செல்பி கேட்டது.

இந்த முறை ப்ரித்வி ஷா மறுத்துவிட்டார். அவர்கள் வற்புறுத்தியதால், ப்ரித்வி ஷாவின் நண்பர் உணவக மேலாளரை அழைத்து அவர்கள் மீது புகார் செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு மேலாளர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இரவு உணவு முடிந்து ப்ரித்வி ஷாவும் அவரது நண்பரும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது, சிலர் பேஸ்பால் பேட்களுடன் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேஸ்பால் மட்டைகளை பயன்படுத்தி வாகனத்தின் முன் மற்றும் பின் கண்ணாடிகளை உடைத்ததால் ப்ரித்வி ஷாவின் நண்பரின் கார் சேதப்படுத்தப்பட்டது. மேலும் ப்ரித்வி ஷாவுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டம் 384, 143, 148, 149, 427, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்