Tue ,Oct 03, 2023

சென்செக்ஸ் 65,828.41
320.09sensex(0.49%)
நிஃப்டி19,638.30
114.75sensex(0.59%)
USD
81.57
Exclusive

மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுப்பது உறுதி..? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த Hint!!

Sekar Updated:
மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுப்பது உறுதி..? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த Hint!!Representative Image.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியடைந்த இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்போவதாக இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில், 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் படுதோல்வியிலிருந்து தப்பித்து டீசண்டான தோல்வியிலிருந்து தப்பித்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், இளம் அணியுடன் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் விஷயங்களைப் பற்றி சுட்டிக்காட்டினார்.

இனி வரும் காலங்களில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்களுக்கு டி20 அணியில் இடம் இருக்காது என்பதை ராகுல் டிராவிட்டின் பேட்டி உணர்த்துவதாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்