புனேவில் நடைபெறும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டியில் ராகுல் திரிபாதி இந்திய அணிக்காக அறிமுகமானார். திரிபாதி டி20 வடிவத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 102 வது வீரராகவும், நடந்துகொண்டிருக்கும் தொடரில் அறிமுகமான மூன்றாவது வீரராகவும் உள்ளார்.
பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ராகுலுக்கு தனது தொப்பியை வழங்கினார். அதே நேரத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஆசியும் இருந்ததால் தான், ராகுல் திரிபாதி பிளேயிங் 11'ஆல் இடம் பெற்றுள்ளார்.
இதற்கிடையே இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ராகுல் திரிபாதி பின்னணி என்ன?
ஜுன் 2022 இல் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் முதன்முதலில் ராகுல் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறுதிவரை பயன்படுத்தப்படவில்லை. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனை ராகுல் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தார்.
ஐபிஎல் 2022 இல், அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் 413 ரன்கள் எடுத்தார் மற்றும் ஐபிஎல் 2022 சீசனின் கடைசி நான்கில் இடம் பெறாவிட்டாலும் அணியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார். ஐபிஎல் 2022 சீசனில் ராகுல் 76 ரன்களுடன் மூன்று அரைசதங்கள் அடித்தார்.
சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி களமிறங்கிய நிலையில், ஹர்ஷல் படேலுக்கு பதிலாக ஹர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…