அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் டபிள்யூடிஏ 1,000 போட்டிக்குப் பிறகு, இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
36 வயதான அவர் ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார் மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் தனது கடைசி பெரிய போட்டியில் விளையாடவுள்ளார்.
சானியா மிர்சா 2005 இல் தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடந்த WTA ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். அவர் 2007 இல் தரவரிசையில் டாப் 30 இடங்களுக்குள் நுழைந்து, உலகத் தரவரிசையில் 27வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் போட்டியிடுவார். அதையடுத்து அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் டபிள்யூடிஏ 1,000 போட்டியில் பங்கேற்று, அத்தோடு டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் தனது கணவரும் பாகிஸ்தானின் முன்னாள் வீரருமான ஷோயப் மாலிக்குடன் வாழ்ந்து வரும் துபாயில், தனது குடும்ப வாழ்க்கையில் அதிக கவனத்தை செலுத்த உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…