தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல்லை போல முதல் முறையாக சிஎஸ்ஏ டி20 லீக் நாளை தொடங்கும் நிலையில், திடீர் திருப்பமாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் இனி லீக் கிரிக்கெட் மற்றும் குறுகிய கிரிக்கெட் வடிவங்களில் தனது கவனத்தை செலுத்த விரும்புகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான (5/17 vs பாக்) சாதனையை டுவைன் பிரிட்டோரியஸ் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஓய்வு குறித்து டுவைன் பிரிட்டோரியஸ் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடக பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்தேன். அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவிற்கு அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டோரியஸ் 30 டி20, 27 ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ளார். அவர் இதுவரை மொத்தமாக 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் இரண்டு உலகக் கோப்பை அணிகளில் இடம்பெற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் 2022 சீசன் வரை, தென்னாப்பிரிக்காவின் முதல் ஆல்-ரவுண்டர் தேர்வாக பிரிட்டோரியஸ் இருந்தார். ஆனால் அவர் தனது கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இளம் வீரர் மார்கோ ஜான்சனிடம் தனது இடத்தை இழந்தார். 2021 உலகக் கோப்பையில், டெத் ஓவர்களைப் பொருத்தவரை தென்னாப்பிரிக்காவின் விருப்பமான பந்துவீச்சாளராக பிரிட்டோரியஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…