லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்து வருவதால், இன்று உணவு இடைவேளை வரை போட்டி தொடங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 281 ரன்களை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை சேர்த்தது. இதனால் ஆஸி. அணி வெற்றிபெற 174 ரன்கள் தேவையாக உள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த வேண்டும். இதனால் 5ஆம் நாள் ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. யாருக்கு முதல் வெற்றி என்பதை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பர்மிங்ஹாமில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்படுவதோடு, பேட்டிங் செய்வதற்கும் சாதகமாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், உணவு இடைவேளைக்கு முன்பாக ஆட்டம் தொடங்க வாய்ப்பே இல்லை என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
ஏனென்றால் 3 செஷனில் 174 ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட சூழலில், ஒரு செஷன் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்டம் தொடங்கியதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றாலும், ஆஸ்திரேலிய அணி ஒரு சில விக்கெட்டை இழந்தாலும் தோல்வியடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் ரசிகர்கள் குடையுடன் காத்திருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…