பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான். வாடிவாசலைத் திறந்து காளைகளை அடக்கும் காளையர்களைக் காண மக்கள் திரண்டு நிற்பர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் இருந்தாலும், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பதற்கு தனி சிறப்பு உண்டு. ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளையை ஒரு வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாகக் கருதப்படுகிறது. இப்படி தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
இந்த வகை ஜல்லிக்கட்டு மதுரை, தேனி, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு நடப்பது அனைவருக்கும் நன்கு தெரியக்கூடிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. இதில், வாடிவாசல் என்னும் வாயில் வழியாக காளைகள் திறந்து விடப்பட்டு, சீறிக் கொண்டு ஓடும். இந்த காளையை எந்த ஒரு வீரர் தாவி காளையின் திமிலைப் பிடித்து குறிப்பிட்ட தூரம் வரை செல்கிறார்களோ அந்த வீரரே வெற்றியாளர் ஆவார். இதில் காளையை யாரும் பிடிக்கவில்லை எனில் காளையே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வடம் என்பது தமிழில் கயிறு என அழைக்கப்படுகிறது. அதாவது கயிற்றைக் கொண்டு காளையை அடக்குவதே வடம் மஞ்சுவிரட்டு ஆகும். இதில், காளையை 15 மீ அளவிலான கயிறு ஒன்றில் கட்டி, அந்த குறிப்பிட்ட விட்டத்துக்குள்ளேயே ஜல்லிக்கட்டி போட்டி நடைபெறுவது வடம் மஞ்சுவிரட்டு என அழைக்கப்படுகிறது. இதில், 7 அல்லது 8 பேர் கொண்ட அணியில் உள்ள வீரர்கள், காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
வேலி மஞ்சுவிரட்டு என்பதும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வகை ஆகும். இது நம் தமிழகத்தில் மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபலமாகக் காணப்பட்டது. இதில், காளையின் மூக்குக்கயிற்றை திறந்த வெளியில் அவிழ்த்து விடுவார்கள். இவ்வாறு அவிழ்த்து விடப்படும் காளை, எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம். இவ்வாறு சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் அடக்க வேண்டும். இது 5 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை கூட நடைபெறும்.
தமிழர்களின் இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் காளைகளை வைத்து விளையாடுவது மட்டுமல்ல. இதில், மக்கள் ஆடுகளை வைத்து கிடா சண்டையும், கோழிகளை வைத்து சேவ சண்டையும் விளையாடப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலும் அனைவருக்கும் பிரபலமாக இருப்பது வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆகும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகக் கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு ஈராண்டு காலத்திற்குப் பிறகும் தமிழகத்தின் பெருமையை எடுத்துக் கூறும் எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…