Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஆறாம் அறிவிற்கான விளையாட்டு உறியடி...வரலாறு மற்றும் விதிமுறை | Uriyadi Vilaiyattu History in Tamil

Priyanka Hochumin Updated:
ஆறாம் அறிவிற்கான விளையாட்டு உறியடி...வரலாறு மற்றும் விதிமுறை | Uriyadi Vilaiyattu History in TamilRepresentative Image.

மக்கள் ஒன்றாக கூடும் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க சில விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஆரம்பித்தனர். பின்னர் அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அவர்கள் பண்டிகை காலங்களிலும் அதனை கடைபிடிக்க ஆரம்பித்தனர். அப்படி வந்தது தான் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டிகள். தை பொங்கலின் போது ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ், இளவட்டக்கல் என்று பல போட்டிகள் நடைபெறும். அதில் மிகவும் சவாலான மற்றும் புத்திகூர்மையான விளையாட்டைப் (உறியடி) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஆறாம் அறிவிற்கான விளையாட்டு உறியடி...வரலாறு மற்றும் விதிமுறை | Uriyadi Vilaiyattu History in TamilRepresentative Image

கண்ணன் பிறந்த நாளில் நடைபெறும் விளையாட்டு தான் உறியடி. அதற்கு பொருள் உரிமரம். இது முற்றிலும் இளைஞர்களுக்கான விளையாட்டு என்பதால் கூடுதல் சுவாரசியம் இருக்கும். ஆண்களுக்கு மட்டும் இல்லாது இந்த விளையாட்டு பெண்களுக்கும் பல இடங்ளில் நடைபெறுகிறது. இது இளைஞர்களுக்கு இடையே போட்டி உணர்வுடன் நடைபெறும் என்பதால் சவால்கள் அதிகம் காணப்படும். மேலும் அவர்கள் பந்தயம் வைத்தும் விளையாடும் பழக்கம் உள்ளது.

ஆறாம் அறிவிற்கான விளையாட்டு உறியடி...வரலாறு மற்றும் விதிமுறை | Uriyadi Vilaiyattu History in TamilRepresentative Image

இது காலம் காலமாக கிராம புறங்களில் கடைபிடிக்கும் ஒரு சம்பிரதாயமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஊர்களில் பல வேறுபாடுகளுடன் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட உயரத்தில் உறியை தொங்க விட கோல்களைக் கொண்டு சாரம் காட்டப்படும். அந்த பானையில் பொன், பொருள் என்று பரிசுப் பொருட்களால் நிரப்பி தொங்க விடுவார்கள். இதற்கு 10 அடி தூரத்தில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்களாக கண்களில் கருப்பு துணியை கட்டிவிட்டு கையில் கொம்பையுடன் வருவார்கள். யார் அந்த உறியை அடித்து உடைக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர் மற்றும் கோலாகல மரியாதையை வழங்கப்படும்.

ஆறாம் அறிவிற்கான விளையாட்டு உறியடி...வரலாறு மற்றும் விதிமுறை | Uriyadi Vilaiyattu History in TamilRepresentative Image

சில இடங்களில் வெறும் உறியை மட்டும் தொங்க விட்டு அடிக்க விடுவார்கள். சில இடங்களில் உறியில் கயிறை கட்டி, அதனை அடிக்க வரும்போது ஏத்தி இறக்கி விளையாடுவார்கள். சில இடங்களில் இளைஞர்கள் ஒருவரின் மேல் ஒருவர் ஏறி அந்த உறியை அடிப்பார்கள். சில இடங்களில் உறியடிக்கும் போட்டியாளர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி அவர்களின் கவனத்தை சிதைத்து கடுமையான போட்டியாக நடத்தப்படும். இது முற்றிலும் மகிழ்ச்சிக்கான விளையாட்டு என்பதால் பொது மக்களும் கைத்தட்டி உற்சாகத்துடன் கண்டு கழிப்பார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்