ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன், கட்டாக் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜஸ்ரீ ஜனவரி 11ம் தேதி முதல் காணவில்லை. அவரது பயிற்சியாளர் வியாழக்கிழமை கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காட்டில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார்.
குருதிஜாட்டியா காவல் நிலையத்தில் ராஜஸ்ரீ மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. எனினும், உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது மற்றும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ஸ்வைன் உட்பட சுமார் 25 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்றதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி ஜனவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்வைனால் இறுதிப் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.
அடுத்த நாள், வீராங்கனைகள் தங்கி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்றனர். ஆனால் ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக தனது பயிற்சியாளரிடம் தெரிவித்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…