ப்ரோ மல்யுத்த வீராங்கனை சாரா லீ தனது 30 வயதில் அகால மரணம் அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவலால் WWE ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எங்கள் சாரா வெஸ்டன் இயேசுவுடன் இருக்கச் சென்றுள்ளார் என்ற செய்தியை நாங்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம் என்று சாராவின் தாயார் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சாரா லீ 2015 இல் WWE இன் டஃப் எனஃப் என்ற ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு போட்டியாளர்கள் WWE உடன் கையெழுத்திடும் வாய்ப்பிற்காக போட்டியிடுவார்கள். அவர் செப்டம்பர் 2016 வரை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.
சக முன்னாள் WWE நட்சத்திரமான வெஸ்டின் பிளேக்கை 2017 டிசம்பரில் மணந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில், மே மாதம் அவர்களுக்கு முதல் குழந்தையான ஒரு பெண் குழந்தை பிறந்தது.
பிப்ரவரி 2019 இல், தம்பதியினர் தங்கள் இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்த ஜோடி பின்னர் 2021 ஜூலையில் மற்றொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தது.
இந்நிலையில் வெறும் 30 வயதில் தற்போது அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…