Tue ,Oct 03, 2023

சென்செக்ஸ் 65,828.41
320.09sensex(0.49%)
நிஃப்டி19,638.30
114.75sensex(0.59%)
USD
81.57
Exclusive

'That Will Never Work' உங்க பிசினஸ் வெற்றியடைய நெட்ஃபிளிக்ஸின் மார்க் ராண்டல்ஃப் கொடுக்கும் 6 டிப்ஸ்...!!

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 13:30 [IST]
'That Will Never Work' உங்க பிசினஸ் வெற்றியடைய நெட்ஃபிளிக்ஸின் மார்க் ராண்டல்ஃப் கொடுக்கும் 6 டிப்ஸ்...!!Representative Image.

கொரோனா நோய் பரவலுக்கு பிறகு, நம்மில் பெரும்பாலானோர் வார இறுதியில் ரிலாக்ஸ் செய்துக்கொள்வதற்காக முதலில் தேடுவது நெட்ஃபிளிக்ஸை தான் என்று சொன்னால் மிகையாது. அந்த அளவிற்கு நம்மை தன்வசப்படுத்தியுள்ள பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் 'Netflix', நம்மை ரிலாக்ஸ் செய்ய உதவதோடு நம்மில் குடிக்கொண்டிருக்கும் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கிறது. 

ஆமாங்க, வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனர்களான மார்க் ராண்டல்ஃப் 'Marc Randolph' மற்றும் ரீட் ஹேஸ்டிங்ஸ் 'Reed Hastings' நம்மில் இருக்கும் தொழில்முனைவோரை தட்டி எழுப்புவதற்காக சில பிசினஸ் யுக்திகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், மார்க் யோசனை உருவாக்கும் மற்றும் சந்தை சோதனை முதல் சமூகத்தை உருவாக்குதல் மற்றும் தோல்வி வரை ஒரு தொழில்முனைவோருக்கு தேவையான அத்தியாவசிய வணிகப் பாடங்களை தட் வில் நெவர் ஒர்க் 'That Will Never Work' என்ற தனது புத்தகத்தின் மூலம் கற்பிக்கிறார். இந்த புத்தகம் தொழில்முனைவோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

"தட் வில் நெவர் ஒர்க்"

பல தோல்விகள், சறுக்கல்களுக்கு பின்பு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு தளம் தான் நெட்ஃபிக்ஸ், ஆனால், தற்போது உலகளவில் 220.67 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் இந்த உயரத்தை அடைந்ததற்கு காரணத்தை தான் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார் மார்க். நெட்ஃபிளிக்ஸை விட்டு வெளியேறிய 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். 

தட் வில் நெவர் ஒர்க் புத்தகத்தில், ஒரு நிறுவனத்தை ஜீரோ நிலையில் இருந்து தொடங்கி இன்று நெட்ஃபிளிக்ஸ் அடைந்துள்ள நம்பமுடியாத வெற்றியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்ல என்ன தேவை என்பதை புரிந்துக் கொண்டு தான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில், ஒரு பிசினஸை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல உதவும் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் போன்ற முக்கிய நடைமுறைகளை பற்றி விரிவாகக் கூறுகிறார்.

தட் வில் நெவர் ஒர்க் பெயர் காரணம்:

மார்க் ஒவ்வொரு முறையும் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிசினஸ் யோசனையைப் பற்றி கேட்கும்போதெல்லாம், அவருக்கு கிடைத்த பதில் "அது வேலை செய்யாது" என்று தானாம். அதனாலையே, அவர் எழுதிய புத்தகத்திற்கு அந்த பெயரை வைத்துள்ளார். சரி இப்போது அவர் கூறிய மிக முக்கியமான ஆறு தொழில்முனைவோர் பாடங்களை பார்க்கலாம். 

ரிஸ்க் எடுக்க தயாரா இருக்கனும்..

அனைத்து புதிய முயற்சிகளுக்கும் ரிஸ்க் எடுப்பதே அடிப்படை என்பது பிசினஸ் உலகில் அறியப்பட்ட உண்மை. பெரிய வணிக சாம்ராஜியத்தை உருவாக்க விரும்பினால், விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். இதுவும், அடிப்படையான விஷயம்.

யோசனைகளை உருவாக்க ஒரு வலுவான திறன் வேணும்...

நீங்கள் ஒரு யோசனையுடன் உங்க நிறுவனத்தை தொடங்கி, அதை வெற்றியடைய இலக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது. ஒரு நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் குறைந்தது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான யோசனைகளை கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் அவை தோல்வியை தழுவும்போது, இந்த யோசனைகள் ஏன் வேலை செய்யாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான யுக்திகளை வகுக்க வேண்டும். 

முதலீட்டாளர்களின் தொடர்பு முக்கியமானது என்பதை உணரனும்..

ஆர்வ கோளாறில் ஆரம்பத்தில் நீங்க எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், ஒரு உறுதியான வணிக உத்தி 'Solid business strategy', வழக்கமான செயல்திறன் மதிப்பீடு 'Regular performance assessment', நிதி முன்னறிவிப்புகள் 'Financial forecasts' இல்லாமல், உங்களால் எதையும் செய்ய முடியாது. எனவே, முதலீட்டாளர்களுடன் வெற்றிகரமாகத் தொடர்புகொள்வதற்கு உங்களுக்கு ஒரு உறுதியான வளர்ச்சிப் பாதையை கொண்டிருக்க வேண்டும். 

உங்க தொழில் சம்பந்தமான மார்க்கெட் பற்றி தெளிவாக புரிஞ்சிக்கணும்... 

எல்லாருக்கும் ஐடியா இருக்கும், ஆனால் எல்லா ஐடியாவும் க்ளிக் ஆகும் என்று சொல்ல முடியாது. எனவே, முதலில் உங்க கருத்தை பற்றி யாராவது அக்கறை காட்டுகிறார்களா என்பதை கண்டறியுங்கள். அப்படி ஒருவேளை உங்க ஐடியாவை அனுசரிக்கிறார்கள் என்றால், அந்த பகுதி, அதன் தேவைகள், மற்றும் மக்களின் பயன்பாடு குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படியும் தோல்வியடைந்தால், குறைபாடுகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர, உடனே இலக்கை மாற்ற கூடாது.

 

தோல்வியே வெற்றியின் முதல் படி...

ஒவ்வொரு தோல்வியும், அவமானமும் வெற்றியின் படிகள் என்பதை உணர்ந்தாலே உங்களுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் மார்க். எல்லா முயற்சியும் தோல்வியாகது.. எல்லா தோல்வியும் உங்களை தடுக்க முடியாது... 

எதற்கும் தயாராக இருக்கணும்..

நாம் புதுமை மற்றும் படைப்பாற்றால் யுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஒவ்வொரு தொழில்முனைவோர்களும் சாத்தியமான சந்தை மாற்றங்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். புதுமையை உருவாக்க வேண்டும். உங்களிடம் நீங்களே கேள்வி கேளுங்கள். இந்த முயற்சி எப்படி இருந்தால் சாத்தியமாகும் என்பதை யோசியுங்கள். அப்போது தான் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், விருப்பத்திற்கும் உங்களால் பதில் கூற முடியும். 

"வெற்றிகரமான வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க ஒரு நல்ல ஐடியா இருந்தால் மட்டும் போதாது, அதை விரைவாகவும் எளிதாகவும் மலிவாகவும் அமைக்க வழிகளை கண்டுபிடிப்பதில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது" என்கிறார் மார்க்.

Tags:

Entrepreneur tips, Entrepreneur tips in tamil, Netflix founders, Netflix inspiration, Marc Randolph's business tips, Marc randolph entrepreneurship


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்